டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பணி நேரத்தின் போது ஃபேஸ் மாஸ்க் போட்டதற்காக அந்த ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்ய பட்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாங்காங்: சமீபத்தில் சீன டாக்சி டிரைவர் ஒருவர் கிழக்கு சீனாவில் பனியின் போது தனது அழகாய் பராமரிக்க ஃபேஸ் மாஸ்க் அணிந்தபடி அவர் பணயில் ஈடுபட்ட கேளிக்கையான சம்பவம் நடந்துள்ளது. 


இதையடுத்து, அந்த டாக்ஸி ஓட்டுனரை அந்த நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. சென் யிகுன் (Chen Yiqun) எனும் வாடகைக் கார் ஓட்டுநர், இரவுப் பணியின் போது பெட்ரோல் போடுவதற்காக நகரப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, முகப்பராமரிப்புக்கான அழகுசாதன முகமூடி அவர் அணிந்திருந்தார். இதை, பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து, கவனியுங்கள் பெண்களே...! எவ்வளவு பணியிருந்தாலும் முகப்பராமரிப்பு முக்கியம் என குறிப்பிட்டு அவர் அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். 


இதையடுத்து அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிகம் பேரால் பகிரப்பட்டதையடுத்து, போலீசார் அவரைத் தேடி வந்தனர். முகமூடி நழுவி விழுந்தால், பார்வை மறைக்கப்பட்டு, விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், அஜாக்கிரதையாக செயல்படக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.