தெலங்கானா மாநிலத்தில் பிரபல அங்காடி ஒன்றில் புது புடவை ஒன்று ரூ.10 என அறிவிக்கப்பட்டு, பலரது உயிருக்கு ஆபத்தாய் அமைந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலங்கானா மாநிலத்தின் சித்திப்பெட் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சி.எம்.ஆர் பல்பொருள் அங்காடியில், புது புடவை ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கேட்டு அப்பகுதி மக்கள் புடவையை வாங்குவதற்கு படையெடுத்துள்ளனர்.


இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணாமாக பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும் பலரது உடமைகள் கூட்டத்தில் இருந்த கயவர்களால் கொள்ளையடிக்கப் பட்டதாகவும் தெரிகிறது.


இந்த பல்பொருள் அங்காடி அறிவித்த சலுகை விற்பனை காரணாமக இளம்பெண்களும், மகளிர் கூட்டமும் அதிகளவில் விற்பனையகத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் அங்காடிக்கு வந்த பொதுமக்களின் உடைமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


குறிப்பாக கூட்டத்தில் சிக்கி தன் உடைமைகளை இழந்த பெண்மணி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில்., தனது 5 சவரன் தங்கச்சங்கிளி மற்றும் ரூ..6000 ரொக்கப்பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார்.


இச்சம்பவத்திற்கு பின்னர்., மது, மாது மட்டும் வாழ்க்கைக்கு கேடு இல்லை, சலுகை விற்பனையும் கூட ஆபத்தாய் அமையலாம் என உணர முடிகிறது!