இந்தியாவில் 1800களுக்கு முன்பு சுமார் 600 ஆண்டுகள் துணை கண்டம் முழுவதும் காளியின் பிள்ளைகள் என தங்களை தாங்களே கொண்டாடிக்கொண்ட ஒரு கூட்டம் இருந்தது. காளிக்கு மனிதர்களையே பலி கொடுக்கும் அளவுக்கு தீவிரமான அரக்க பக்தர்களாக வலம் வந்தவர்கள் அவர்கள். யார் இவர்கள்., இப்போது எங்கே போனார்கள். எதற்காக இப்படி கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என பல கேள்விகள் எழுகிறது. இந்த கூட்டத்தின் பெயர் தக்கர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்தியா முழுவதும் அங்காங்கே குழுக்களாக பிரிந்து கிடந்த இந்த தக்கர்கள் தயவு தாட்சினை பாராமல் கொலை செய்து கொள்ளையடிப்பதில் வல்லவர்கள். பரம்பரை தொழில் என பலவற்றை உண்டு ஆனால் இது தக்கர்கள் பரம்பரை தொழில். இந்தியாவின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தக்கர்கள், பசி பட்டிணிக்காகவோ, அல்லது உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகவோ கொள்ளையடிக்கவில்லை என வரலாறு கூறுகிறது. உண்மையில் இவர்கள் பிழைப்பே கொள்ளையடித்து சொகுசாக வாழ்வது மட்டுமே. ஆனால், வேறு எந்த மணிதர்களிடமும் இல்லாத சாமார்த்தியமும், தைரியமும் இவர்களிடம் இருந்தது என்றால் அதுதான் ஆச்சரியம்.


மேலும் படிக்க | 'Thug life' - னா என்ன தெரியுமா? அது எப்படி பிரபலம் ஆச்சு தெரியுமா?


ஒரு கூட்டத்தில் ஒற்றையாக சென்ற தக்கன் ஒருவர் காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள், ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித பாரபட்சமும் இன்றி கொலை செய்து துணிவோடு திரும்புவான் என்றால் அதுதான் அவனின் சாமார்த்தியம். இவர்களின் கொலை தந்திரத்தில் முக்கியமான ஒன்று சுருக்கு கயிற்றை வீசி எரிந்து கழுத்தில் சிக்க வைத்து நெரித்துக்கொல்வதே. இவர்களின் இந்த கொள்ளைக்கு முடிவு கட்டவும் இதன் பெயரை சொல்லி இந்தியாவில் இருந்த வளத்தை சுரண்டிச்செல்லவும் 1830களில் பிரிட்டிஷ் அதிகாரியான வில்லியம் ஸ்லீமன் மற்றும் சிலர் வருகை தந்தனர்.


இங்கு வந்து தக்கர்களின் கோர தாண்டவத்தை பார்த்த ஸ்லீமன் நடுநடுங்கி போயுள்ளார். ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த தக்கர்களின் கையில் பிரிட்டீஷ் அதிகாரிகள் பலரும் சிக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் தக்கர்களின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என நினைத்த ஸ்லீமன், இங்கிலாந்துக்கு விரிவான ஒரு கடிதத்தை அனுப்பினார். உடனடியாக தக்கர்களை கொன்று குவிக்க இங்கிலாந்தில் இருந்து ஆணையும் வந்தது. தந்திர தாண்டவம் ஆடிய தக்கர்களை பிரிட்டீஷின் துப்பாக்கி குண்டுகள் துளைக்க தொடங்கியது. இதில் பலர் செத்து மடிந்தனர். அதையும் தாண்டி எங்கெல்லாம் தக்கர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் படையை அனுப்பி அவர்களை கொலை செய்ய ஸ்லீமன் நடவடிக்கை எடுத்தார்.



மேலும் படிக்க | அசைவ பிரியர்களுக்கு ஒரு அட்வைஸ்.., தயவு செஞ்சு இந்த மீன் மட்டும் சாப்பிடாதீங்க.!


இருதியில் இந்தியாவில் தக்கர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டதாக இங்கிலாந்துக்கு ஸ்லீமன் கடிதமும் எழுதினார். ஆனால், இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மறுபணு மாறிய தோற்றத்தில் தக்கர்களின் தைரியத்தோடும், துணிச்சலோடும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என, 1884-ல் முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பணிக்காக தேக்கடி வந்த மேஜர் ஜான் பென்னி குயிக் தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தக்கர்களிடம் இருந்துதான் தாக் என்ற உருது வார்த்தை உருவானது. தாக்தான் பின்னாளில் தக் என மாற்றம் பெற்று மேலை நாடுகளில் தக் லைஃப் என பிரபலமானது. அது தற்போது நமது இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் தக் லைஃப் என கொண்டாடப்பட்டு வருகிறது. கொள்ளை கும்பலை குறிக்கும் ஒரு வார்த்தை கொள்கை குறித்து பேசும் ஒருவருக்கு எப்படி பொருந்தும் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.


மேலும் படிக்க | பைக் ரேஸ் சென்ற இளைஞர்கள்... உயிரிழந்த பெண்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR