எவன் ஒருவன் பூஜ்யத்தில் தொடங்கி, தன்னை ஏதோவொன்றாக வளர்த்துக் கொள்கிறானோ அவனே 'தக்'. தொப்பி , கண்ணாடி, சுருட்டு எல்லாம் நாமாக சேர்த்துக்கொண்ட ஒன்று. இழப்பதற்கு எதுவுமில்லாத, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் வாழ்வை 'தக் வாழ்க்கை' என்று மேலை நாடுகளில் கூறுகிறார்கள்.
உண்மையில் இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது. இதற்கு அர்த்தம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால், "தக்" என்ற சொல்லின் வேர், இந்தியாவில் உருது மொழியின் 'தாக்' என்பதில்தான் ஆரம்பிக்கிறது. தக் என்பதை உலகிற்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். தாக் என்ற வடசொல் 'பின்விளைவை நினைத்துப் பார்க்காத, துணிவான, மோசடிக்காரனை' குறிப்பது. 1800-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆங்கில மொழியில் 'தக்' வார்த்தை மெல்ல நுழைந்தது.
மேலும் படிக்க | நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் விஜய், அஜித்!
காரணம், இந்தியாவில் ஆங்கிலேயர் சந்தித்த விபரீத 'தக்' மனிதர்கள் அப்படி. ஆங்கிலேயர்களை விரட்டி விரட்டி ஓட விட்டவர்கள் தாக்குகள். 1800 ஆரம்பத்தில், இந்திய நெடுஞ்சாலைகளில், பல்லாயிரக்கணக்கான பயணிகளை, வெகு சாதாரணமாக கழுத்தை நெரித்து கொன்று, உடமைகளை கொள்ளையடித்த குற்றவாளி கும்பல் ஒன்று நடமாடியதாக நம்பப்பட்டது. இவர்கள் தக்குகள்தான் எனவும் 'பிண்டாரிகள்' எனவும் ஆங்கில அரசின் ஆவணங்கள் குறித்துள்ளன.
கொலை சம்பவத்தை பரம்பரை தொழில்முறையாகவே கொண்டவர்களின் வாழ்கை, 'தக்' என கருதப்பட்டது. 'இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆஃப் தி ஹிஸ்டரி அண்ட் பிராக்டிஸஸ் ஆஃப் தக்ஸ்' Illustrations of the history and practices of the Thugs, (1837) என்ற நூலில் "இந்தியாவில் ஏராளமான பரம்பரை தொழில்கள் உள்ளன. அதுபோலத்தான் கொலை செய்யும் 'தக்' குண்டரின் தொழிலும் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. 'தக்'குகள், அழித்தொழிப்பின் தெய்வமான காளியை வணங்குபவர்கள் என்பதும், 'பிறவி குற்றவாளிகள்' என்று சித்தரிக்கப்பட்டனர்.
'தக்'குகளின் சிலீரிடும் கொலை வழக்கம் ஆங்கிலேயர்களை திகைப்பில் ஆழ்த்தியது. 'இந்த கூட்டத்தை வேருடன் ஒழிக்கவேண்டும். இல்லையேல் இந்தியாவில் 'கம்பெனி'யின் கொள்ளையை தொடரமுடியாது' என 1830-ல் இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. உடனே, தக்குகளை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது ஆங்கிலேய அரசாங்கம்.
'கூண்டோடு இவர்களை அழிக்கும்' வேலையை முன்னின்று செய்தவர்கள், இந்தியாவின் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் 'லார்ட் வில்லியம் பெண்டின்க்' மற்றும் 'கேப்டன் வில்லியம் ஸ்லீமன்' ஆகியோர்தான். ஏறக்குறைய 4,000 தக் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சுமார் 2,000 பேருக்கு மரண தண்டனை. மற்றவர்களுக்கு தீவாந்தர ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. கேப்டன் ஸ்லீமன் இந்தியாவில் 'தக்'குகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக' லண்டனுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். பிலிப் மெடோஸ் டெய்லர் எழுதிய 'ஒரு 'தக்'கின் வாக்குமூலம்' நூற்றாண்டின் மிக பிரபலமான நூல். (Confessions of a Thug-1839) "தக்" என்ற இந்திய வார்த்தை உலக வழக்கானது இப்படித்தான் . 'தக்' என்ற அஞ்சா நெஞ்சர்கள். இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட்டதாக அறிவித்த 50 வருடங்கள் கழித்து ஆங்கிலேயர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
மேலும் படிக்க | இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்... கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்
1884. முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பணிக்காக தேக்கடி வந்தார் மேஜர் ஜான் பென்னி குயிக், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழ்ந்த வருச நாட்டு மறவர்களின் வாழ்க்கை, உயிருக்கு அஞ்சாத அவர்களின் நெறி மீறிய செயல்கள் இவற்றைக் கண்டு அசந்து போனார். நீண்ட பட்டியலிட்டு லண்டனுக்கு அனுப்பினார்.'வறுமையில் வாடி, பிழைப்புக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த இந்த இனத்தின் 'தக்' வாழ்க்கை மாற வேண்டுமானால் அந்த பகுதி வளம் பெறவேண்டும்' என்பது அவரது கணிப்பு. 'அணை எழுப்பி, ஐந்து மாவட்ட செங்காட்டு தரிசு மண்ணை, வளமான விவசாய நிலங்களாக மாற்ற வேண்டும்' என்பதுதான் அவர் அறிக்கையின் அடிநாதம். இன்று அந்த மக்களுக்கு ஜான் பென்னி குயிக் ஒரு குல சாமி.
வருச நாட்டு மறவர்கள் மட்டுமல்ல, மேலூர் வரைக்குமே தமிழர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு பென்னியின் பெயர் சூட்டி இன்றும் நன்றியுடன் வணங்குகிறார்கள். பள்ளிபருவத்திலிருந்து நெருங்கிய நண்பர்களில் சிலர் அப்பகுதியினர். படித்து, பட்டம் பெற்று டாக்டர், மென்பொறியாளர் என்றெல்லாம் பெரிய பணிகளில் இருக்கிறார்கள். பொதுவெளியில், மால்களில் யாராவது நம்மை சீண்டினால், 'ஒதுங்கி வா' என்று நண்பர்கள் சொல்லி கேட்டிருப்பீர்கள். ஆனால் அவர்களில் ஒருவராக இந்த பட்டதாரி இருந்தால் அவர் சட்டைக்கு அடியில் ஒரு 'தக்' இதயம் துடிப்பதை இன்ஸ்டன்டான்டாக உங்களால் உணரமுடியும். டாக்டராவது, கலெக்டராவது இன்றும் தமிழக தென் மாவட்டங்களில் நாகரீக உலகின் 'தக்' பரிமாண குணம் கொண்ட மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்... கை விரித்த சீனா...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR