அசைவ பிரியர்களுக்கு ஒரு அட்வைஸ்.., தயவு செஞ்சு இந்த மீன் மட்டும் சாப்பிடாதீங்க.!

மீன் வகைகளில் இந்த குறிப்பிட்ட மீன் மட்டும் உட்கொள்ள இந்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவை மார்க்கெட்டுகளில் கிடைப்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

Written by - Dayana Rosilin | Last Updated : Jun 11, 2022, 09:15 PM IST
  • தடை செய்யப்பட்ட தேளி மீன்
  • சட்டவிரோதமாக மார்கெட்டில் விற்பனை
  • பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
அசைவ பிரியர்களுக்கு ஒரு அட்வைஸ்.., தயவு செஞ்சு இந்த மீன் மட்டும் சாப்பிடாதீங்க.! title=

ஒரு கிலோ மீன் வாங்கி அத துண்டு துண்டா கட் பண்ணி.., மசால் போட்டு பெரட்டி எண்ணையில வருத்து சாப்பிட்டா ப்பாா என்ன ருசி என்ன ருசி எனக்கூறி உண்ணும் அசைவ பிரியர்களே உஷாரா இருங்க. இந்திய அரசால தடை செய்யப்பட்ட ஆண்மை குறைபாடு மற்றும் புற்றுநோயை ஊக்குவிக்கக்கூடிய தேளிவிரால் எனும் மீன் இன்றும் மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது. இந்த மீனை  மொய்மீன், பூ விரால் எனவும் சில ஊர்களில் கூறுவார்கள். உண்மையில் இந்த மீன் ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் வகையை சேர்ந்தது எனக்கூறப்படுகிறது. ஆசிய நாடுகளுக்குள் பரவி அஸ்ஸாம் பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்தாகவும் கூறப்படுகின்றன.

ஆனால், இந்தியாவில் பெரிய அளவில் இல்லாமல் இருந்த இந்த மீன் வகையை அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று இந்தியாவில் வளர்க்க அனுமதி பெற்று நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மீன் பண்ணைகள் அமைத்துக்கொடுத்து விற்பனை செய்து வந்தது. இதனை தொடர்ந்து இந்த மீன் வளர்ப்பை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டு அதற்கு தடையும் விதிக்கப்பட்டது.இருப்பினும், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த மீன் வகை இன்றும் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டுதான் வருகிறது.

குறிப்பாக கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும்,கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து செயற்கையாக வளர்க்கப்படுகிறது. இந்த மீனின் வருகையால்தான் நம் உள் நாட்டு நன்னீர் மீன்களான அயிரை,உளுவை,ஆரால் போன்றவை அழிந்து வருவதாக மீன்வளத்துறையினர் கூறுகிறார்கள். இது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அசைவம் மட்டுமே உண்டு வாழும் இந்த மீனுக்கு கோழி இறைச்சியின் கழிவுகள் கொட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு,புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

மேலும் படிக்க | Cadbury: பழைய விளம்பரத்தில் பாலின சமத்துவம் என்ற புது வண்ணம் கொடுக்கும் கேட்பரி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News