சிறந்த திருமணம் அமைவது அவரவர் தலையெழுத்தை பொருத்து அமையும், சமயங்களில் அது அவர்களின் ராசிகளை பொருத்தும் அமையும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவது ஒரு வரம் என்றால், தன் மனநிலைக்கு ஏற்ற மாமியார்கள் அமைவதும் ஒரு வரம்தான். சில ராசிகளுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்குமாம். யார் அந்த அதிர்ஷடசாலிகள்..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறந்த மாமியார்:


நீங்கள் ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கையை வாழ விரும்பினால், உங்கள் வருங்கால கணவருடனான உங்கள் உறவு மற்றும் அவரது பெற்றோருடனான உங்கள் உறவு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். இவை இரண்டிற்காகவும் நேரத்தையும் முயற்சியையும் செலவு செய்வது முக்கியம். இது சவாலான விஷயமாக தோன்றலாம். ஆனால் சில ராசிக்காரர்கள் சவால்களை சமாளிக்கவும், ஆரம்பத்தில் இருந்தே தங்கள் மாமியாருடன் வலுவான நட்பை உருவாக்கவும் தயாராக உள்ளனர். மாமியார், குறிப்பாக, தங்கள் குழந்தையின் வாழ்க்கைத் துணையை வருங்கால குடும்ப உறுப்பினராக அரவணைப்பதில் சற்று விருப்பமாகவும் கடினமாகவும் இருப்பதால் இதில் வித்தியாசம் ஏற்படலாம். யார் யாருக்கு எப்படிப்பட்ட மாமியார்கள் வருவார்கள்..? இங்கே பார்க்கலாம். 


மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்கள் சிறந்த கணவர்களாக இருப்பார்களாம்..! யார் அந்த தங்கமான ராசி உடையோர்?


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு பிறரை மகிழ்வித்து பார்ப்பது என்றால் அவ்வளவு விருப்பம். அதனால் இவர்கள் காதல் விஷயமாக இருந்தாலும் குடும்ப விஷயமாக இருந்தாலும் அனைத்தையும் அனுசரித்து செல்வர். இவர்களுக்கு மாமியாரின் குணத்தை அனுசரித்து செல்வது ஒன்றும் புதிதல்ல. ஆரம்பத்தில் இவர்களின் மாமியார் கொஞ்சம்‘தகிடு தத்தாம்’காட்டினாலும், இவர்களின் நல்ல குணத்தினை பார்த்த பிறகு மனம் திருந்திவிடுவர். இவர்களுக்குள் அன்பும் அதிகரிக்கும். 


கடகம்: உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் ராசிக்காரர்களுள் கடக ராசிக்கரர்கள் முக்கிய இடத்தை பெற்றுள்ளனர். ஒரு உறவு வலுபட இவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வர். தன் மாமியாருடன் நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள நல்ல முயற்சிகள் எடுப்பர். இவர்கள் ஒன்றாக நேரம் செலவிட்டாலே போதும், மாமியாருக்கு இவரை பிடித்து விடும். 


சிம்மம்: மாமியாரை மயக்க பல வகையான வித்தைகளை கற்று வைத்திருக்கும் மாயாஜால வித்தைக்காரர்கள், சிம்ம ராசிக்காரர்கள். எந்த விஷயத்திலும் பொறுத்து போகும் தன்மை இவர்களிடம் அதிகமாகவே உள்ளது. தன்னால் முயன்றவரை பிறரின் மீது அன்பு வைத்து அந்த உறவை வலுப்படுத்த முயற்சிப்பர். இதனால், இவர் மாமியாருக்கு இவரை விட்டு பிரிய மனசே வராதாம். 


கன்னி: எந்த விஷயம் செய்தாலும் அதை ப்ளான் செய்து செய்பவர்கள், கன்னி ராசிக்காரர்கள். இவர்கள், தாங்கள் செய்யும் எந்த விஷயத்திலும் குறை இருக்க கூடாது என நினைப்பர். அதற்கு ஏற்றவாறு இவர்களது பேச்சும் செயல்பாடுகளும் குறையே இல்லாமல் இருக்கும். உறவுகளையும் நல்ல முறையில் வளர்க்க என்னும் இவர்களை, மாமியார்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த ராசியுடைய மருமகளுக்கும் மாமியாருக்கும் எப்போதும் இருவரின் தேவை பரஸ்பரம் இருந்து கொண்டே இருக்கும். இதனால், ஒருவரை ஒருவர் விட்டு பிரியாமல் இருப்பர். தங்களை புரிந்து கொள்ள எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை விடாமல் பயன்படுத்திக்கொள்வர். தனக்கு ஒரு விஷயத்தில் அட்வைஸ் தேவைப்பட்டால் கன்னி ராசிக்காரர் தன் மாமியாரிடம்தான் கேட்பாராம். அதே போல தன் மருமகளுக்கு ஓடி வந்து உதவ அந்த மாமியாரும் தயங்க மாட்டாராம். 


மேலும் படிக்க | ‘இந்த’ ராசிக்காரர்கள் காதல் ஜோடிகளாக இருந்தால் கண்டிப்பாக ஒத்து வராது..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ