வாழ்வில் பொறுப்புடன் நடந்து கொள்பவர்களை பலருக்கும் பிடிக்கும். அவர்களின் கையைதான் பல நேரங்களில் நாம் எதிர்பார்ப்போம். இவர்களை பலரும் மதித்து நடப்பர். ஆனால் இவர்களுக்கு அப்படியே நேர்மாறான ஆட்களும் இருக்கின்றனர். ஒரு சிலர், வாழ்க்கையில் பொறுப்பே இன்றி சுற்றிக்கொண்டிருப்பர். அவர்களுக்கு “என்ன நடந்தாலும் கவலை இல்லை..” என்பது போன்ற மனப்போக்கை வைத்திருப்பர். அதிலும் குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களுக்கு பொறுப்பே இருக்காதாம். இந்த 6 ராசிகளில் நீங்கள் இருக்கிறீர்களா..? இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.மேஷம்:


மேஷ ராசிக்காரர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்பவர்கள். செயல்படுவதற்கு முன்பு யோசித்து செயல்பட மாட்டார்கள். “ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது..” என்ற பழமொழியை ஃபாலோ செய்யாத ராசிகளுள் இவர்களும் ஒருவர். இதனால் பல தருணங்களில் பிரச்சனையில் சிக்கிக்கொள்வர். ஆனாலும் அதை நினைத்து கவலை படமாட்டார்கள். இவர்களின் இந்த செயல்பாடுகளால் நல்ல முடிவுகளும் வரலாம், மிகவும் ஆபத்தான முடிவுகளும் வரலாம். இது போன்ற குணாதிசயம் உடையோர் பெரும்பாலும் கற்பனை திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 


மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு காதல் மழை பொழியப்போகிறது..! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?


2.சிம்மம்:


எங்கு சென்றாலும் எதை செய்தாலும் அதில் தான் மட்டும் தனியாக தெரிய வேண்டும் என்று நினைப்பவர்கள், சிம்ம ராசிக்காரர்கள். இது போன்ற குணாதிசயம் உடையை சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஒரு பெரும் கூட்டத்திற்கு தலைவர்களாக விளங்குவர். இது போன்ற குணாதிசயம் உடையோர் சமயங்களில் பிறரை தவிர தனது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பர். இது, இவர்களை சுற்றி இருப்பவர்களை பாதிப்படைய செய்யும். இதனால், இவர்களை பலருக்கு பிடிக்காமல் போகலாம். 


3.தனுசு:


தனுசு ராசியை சேர்ந்தவர்கள் சாகச விரும்பிகளாக இருப்பார்கள். சுதந்திர மனப்பாங்கை கொண்டுள்ள இவர்கள், எந்த விதமான விதிமுறைகளையும் விதித்துக்கொண்டு அதற்குள் இருக்க மாட்டார்கள், அப்படி இருக்கவும் அவர்களுக்கு பிடிக்காது. இவர்களுக்கு புதுப்புது சவால்களும், புதுப்புது அனுபவங்களும் மிகவும் பிடிக்கும். இது சமயங்களில் அவர்களுக்கு சாதகமான சூழல்களை ஏற்படுத்திக்கொடுக்கும். இவர்களின் இந்த குணம், சுற்றி இருப்பவர்களுக்கு இவர்கள் பொருப்பற்றவர்களாக இருப்பது போல தெரியும். இப்படி எப்போதும் சாகசத்தை தேடுவதால் அவர்களால் ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டு ஒழுங்காக செயல்பட முடியாது. 


4.மிதுனம்:


எந்த இடத்திற்கு சென்றாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள், மிதுன ராசிக்காரர்கள். இது, அவர்களிடம் இருக்கும் நல்ல குணமாக கருதப்பட்டாலும் சில சமயங்களில் இவர்கள் சீரற்ற எண்னங்களுடன் இருப்பது போல பிறருக்கு தோன்றும். அடிக்கடி தனது எண்ணங்களை மாற்றிக்கொள்ளும் இவர்களை பார்த்து பொறுப்பான பணிகளை கொடுக்க பலரும் அஞ்சுவர். இதனால் மிதுன ராசிக்காரர்கள் பொறுப்பற்றவர்களாக கருதப்படுகின்றனர். 


5.கும்பம்:


கும்ப ராசி உடையோர் தனித்து யோசிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர். தனக்கு எது சரி, எது தவறு என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வர். இவர்கள் இவ்வாறு தனித்து செயல்படுவது எப்போதும் நல்ல முடிவை தரும் என்று கூறிவிட முடியாது. இதனால் பல சமயங்களில் இவர்கள் தோல்வியையும் பெறலாம். இவர்களின் இந்த குணாதிசயத்தால் பலரும் இவரிடம் நெருங்கி பேச பயப்படுவர்.  சமூக கட்டமைப்பில் இருக்கும் பொறுப்பு எனும் அதிகாரத்திற்குள் இவர்கள் வராததால் இவர்களை பொறுப்பற்றவர்களாக பிறர் கருதுவர். 


6.மீனம்:


தனக்கான கனவுலகில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு இருப்பவர்கள், மீன ராசிக்காரர்கள். இவர்களுக்கு எளிதில் கவனச்சிதறல் ஏற்படும். தன்னிடம் ஒரு பிரச்சனை எழுந்தால் அதை முதலில் கவனிக்காமல் பிறர் பிரச்சனையை தீர்க்க ஓடி விடுவர். இந்த குணம், இவர்களை நல்லவர்களாக காட்டினாலும் சில சமயங்களில் பொறுப்பற்றவர்களாக காண்பித்து விடும். இவர்கள் நடைமுறை வாழ்க்கை குறித்து சற்று குறைவாகவே சிந்திப்பர். இதனால், இவர்களின் சிந்தனை மீதும் செயல்பாடுகள் மீதும் பலருக்கு நம்பிக்கை இருக்காது.


மேலும் படிக்க | செப்டம்பர் காதல் ராசிபலன்: இந்த மாதம் யார் யாருக்கு காதல் கைகூட இருக்கிறது..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ