செப்டம்பர் காதல் ராசிபலன்: இந்த மாதம் யார் யாருக்கு காதல் கைகூட இருக்கிறது..?

September 2023 Love Horoscope: செப்டம்பர் மாதம் வந்தாச்சு! சிங்கிள்ஸ்களுக்கு இந்த மாதமாவது உங்களுக்கு காதல் கை கூடுமா? இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க. 

Written by - Yuvashree | Last Updated : Sep 1, 2023, 06:06 PM IST
  • செப்டம்பர் மாதம் யார் யாருக்கு காதல் மலர உள்ளது..?
  • சில ராசிகளுக்கு உன்னதமான பந்தங்கள் உருவாகும்.
  • இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி?
செப்டம்பர் காதல் ராசிபலன்: இந்த மாதம் யார் யாருக்கு காதல் கைகூட இருக்கிறது..?  title=

காதல் ராசிபலன்கள்: பலருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளது. சிலருக்கு ஜோதிடம்  கைக்கொடுக்கும், அதை அவர்கள் திறந்த மனதுடன் வரவேற்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்களை கணிக்க, சிக்கல்களை தவிர்க்க எப்படி ஜோதிடத்தை சிலர் நாடுகின்றனரோ அதே போல சிலர் தங்கள் காதல் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ளவும் ஜோதிடத்தை நாடுகின்றனர். 12 ராசிகளுக்கு இந்த மாதம் காதல் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது? யார் யாருக்கு காதல் கைகூடப்போகிறது? இதோ முழு விவரம். 

மேஷம்:

செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியுடையோர் தங்களது மனதை கேட்டு முடிவெடுப்பர். எப்போதும் கடமை கட்டுப்பாடு என்றிருக்கும் இவர்கள், இந்த மாதம் கொஞ்சம் காதல் வாழ்க்கையையும் கவனிக்க உள்ளனர். அன்புக்குரியவரை மகிழ்விக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால் இவர்களுக்கு உற்சாகமான அனுபவங்கள் உண்டாக வழி பிறக்கும். 

ரிஷபம்:

ரிஷப ராசி உடையோருக்கு செப்டம்பர் மாதத்தில் சில உன்னதமான உறவுகள் வந்து சேர உள்ளன. சமயங்களில் தன்னையே நம்பாத ரிஷப ராசிக்காரர்கள், இந்த மாதம் அன்புக்குரியோர் மீது நம்பிக்கை வைக்க உள்ளனர். தங்கள் காதல் வாழ்க்கையில் ஒளிவு மறைவின்றி பேசி, வரும் பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்து விடுவர். 

மிதுனம்:

இந்த மாதம், மிதுன ராசிக்காரகள் வாழ்க்கை பாடங்கள் மற்றும் காதல் பாடங்களை கற்றுக்கொள்ள இருக்கின்றனர். காதலில் வரும் சண்டையை தவிர்க்க என்னென்ன வழி இருக்கிறதோ அதையெல்லாம் இவர்கள் பேண உள்ளனர். இது, இவர்களுக்கும் இவர்களது அன்புக்குரியோருக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்க உதவும். 

,மேலும் படிக்க | சமையல் கேஸ் சிலிண்டரைப் போலவே வணிக சிலிண்டர் விலையும் குறைந்தது! விலை ரூ 1,695

கடகம்:

கடக ராசிக்கரர்களுக்கு செப்டம்பர் மாதம் பலமாக பல பரிசுகளை வைத்துள்ளது. தங்களது அன்புக்குரியோரிடம் நெருக்கத்தை காட்ட பல முயற்சிகளை மேற்கொள்வர். உணர்ச்சி பூர்வமாக தங்களது காதலன் அல்லது காதலியுடன் நெருக்கமடைய இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 

சிம்மம்:

செப்டம்பர் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் அந்த ராசி உடையோரின் அன்புக்குரியோர்களுக்கும் காதல் மழைதான். விதவிதமாக தன் அன்புக்குரியோரின் மீது அன்பு செலுத்தி அவர்களை ஸ்பெஷலாக உணர வைப்பதற்கு சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் அதிகம் முயற்சி எடுப்பர். 

கன்னி:

இந்த மாதம், தங்கள் அன்புக்குரியோர் தன்னிடம் எப்படி நடந்து கொள்கிறாரோ அதே போல்தான் கன்னி ராசிக்கரர்கள் அவர்களிடம் நடந்து கொள்ள இருக்கின்றனர். தங்களது காதல் வாழ்க்கையை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து அதற்கேற்ப வாழ்பவர்கள் இவர்கள். அவ்வப்போது உங்கள் அன்புக்குரியோருடன் மனஸ்தாபம் ஏற்படலாம். ஆனால், அதை சண்டையாக வளர்க்காமல் சரி செய்து விட வேண்டும். 

துலாம்:

துலாம் ராசி உடையோரின் காதல் வாழ்க்கை எப்போதும் போல இந்த மாதமும் அமைதியாகவே செல்லும். ஏதேனும் மனக்கசப்பு இருந்தால் அதன் மூலம் எதுவும் சண்டை ஏற்படாமல் தடுப்பதற்கு அது குறித்து உங்கள் அன்புக்குரியவர்களிடம் பேசி விடவும். 

விருச்சிகம்:

விருச்சிக ராசி உடையோர், இந்த மாதம் தனது மனது எதை சொல்கிறதோ அதைத்தான் கேட்க உள்ளனர். இந்த ராசி உடையோருகு இந்த மாதம் நெருங்கிய பந்தம் ஒன்று உருவாக உள்ளது. தங்களுக்கு பிடித்த விஷயங்களை, தங்களுக்கு ஏற்ற விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து இவர்கள் பல முடிவுகளை எடுக்க உள்ளனர். இவர்கள், இதுவரை யாரிடமும் கூறாத பல விஷயங்களை தனது அன்புக்குரியோருடன் பகிர முற்படுவர். 

மகரம்:

நடைமுறை சார்ந்த அணுகுமுறைகளை மகர ராசி உடையோர் இந்த மாதம் தங்கள் காதல் வாழ்க்கையில் பின்பற்றுவர். தனது அன்புக்குரியோருடன் சேர்ந்து இவர்கள் தனது காதல் வாழ்வில் முன்னேர முயற்சிப்பர். 

கும்பம்:

கும்ப ராசி உடையோருக்கு இந்த மாதம் தங்கள் அன்புக்குரியோரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். உடலை தாண்டி, உணர்ச்சி பூர்வமாக உன்னதமான பந்தத்தை தனது காதலன்/காதலியுடன் உருவாக்க நினைப்பர். எந்த முடிவு எடுத்தாலும் தங்களது அன்புக்குரியோருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். 

மீனம்:

மின ராசி உடையோர் பிறரை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். தங்கள் அன்புக்குரியோரையும் அவர்கள் என்னென்னெ நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதையும் இவர்கள் தங்கள் காதல் வாழ்வின் முதற்கண்ணாக வைத்திருப்பர். காதல் வாழ்க்கையில் சில கடினமான தருணங்கள் ஏற்பட்டாலும் அதை இடையூறாக உதறி தள்ளி தூய்மையான காதலில் மட்டும் அன்பு செலுத்த உள்ளனர். 

மேலும் படிக்க | 7th Pay Commission: தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! ஜனவரி முதல் 50% டிஏ ஹைக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News