புதுடெல்லி: வாழ்க்கையில் அன்பை பெறுவது மிகவும் முக்கியமானது. அதேபோல் நல்ல துணையைப் பெறுபவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில், சிலர் ஒரு துணையைப் பெறுவதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். அதன்படி 2022-ம் ஆண்டு (Year 2022) சில ராசிக்காரர்களின் இந்தக் காத்திருப்பு முடிவுக்கு வரப்போகிறது. ஜோதிடத்தின் படி, 5 ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கைக்கு (Love Horoscope) புத்தாண்டு சிறப்பாக இருக்கும். அதேபோல் 2022-ம் ஆண்டு சில ராசிகாரர்களுக்கு திருமணமும் செய்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2022ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் இவை


மேஷம்: இதுவரை தனிமையில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு 2022-ம் ஆண்டு காதல் துணையின் பிரவேசம் நிகழப்போகிறது. அதே சமயம் ஏற்கனவே காதல் வயப்பட்டவர்கள் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணமான தம்பதிகளுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு முன்னெப்போதையும் விட வலுவாக இருக்கும், அதே போல் பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.


ALSO READ:Weekly Horoscope: இந்த 2 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும் 


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் திருமணம் கண்டிப்பாக நடைபெற்று விடும். அவர்கள் வாழ்க்கையில் காதல் எதிர்பாராத விதமாக நுழையும். காதலித்தவரை திருமணம் செய்துக்கொள்வீற்கள்.


தனுசு: தனுசு ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கைக்கு 2022ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. காதல் நிரம்பிய சண்டை தொடரும், காதல் மலரும். திருமணத்தில் தடைகளை சந்தித்து வந்த தம்பதிகள் இந்த பிரச்சனையில் இருந்து விலகுவார்கள். திருமணமான தம்பதிகளுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். நீங்கள் ஒரு மறக்கமுடியாத பயணம் செல்வீர்கள்.


மகரம்: மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த ஆண்டு காதல் துணை வரலாம். இவர்களுக்கு மே 2022 முதல் ஜூலை 2022 க்குள் திருமணம் ஆகிவிடும். இந்த ராசிக்காரர்கள் ஆண்டு முழுவதும் தங்கள் துணையை கவனித்துக் கொள்வார்கள். அதே சமயம் திருமணத்தில் தடைகள் இருந்தவர்களும் இப்போது நீங்கிவிடும்.


கும்பம்: ஏற்கனவே காதலித்து வருபவர்களுக்கு, இந்த ஆண்டு அவர்களின் உறவு மிகவும் வலுவாக இருக்கும், மேலும் அவர்கள் திருமணம் செய்ய திட்டமிடுவார்கள். அதே நேரத்தில், 2022 ஆம் ஆண்டு திருமணமானவர்களுக்கும் உறவை வலுப்படுத்தப் போகிறது. 


ALSO READ:இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் 


(Disclaimer: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR