Astrology: பெரும்பாலும் சிலர் சிறிய விஷயங்களுக்கு அழுவது உண்டு. சிலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட இயல்புடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் அணுகுமுறையைப் பார்த்தால், அவர்கள் சிரமங்களைச் சமாளிப்பதில் மிகவும் கஷ்டப்படுவார்கள். இப்படி உணர்ச்சிவசப்படக்கூடிய நபர்களை குறிப்பிட்ட ஒரு சில ராசிகளில் அடக்கி ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்றால் ஒவ்வொரு விஷயத்திற்கும் அதிகமாக மனதில் நினைத்து குழப்பிக்கொண்டு, உணர்ச்சி பொங்கக்கூடிய சூழலில் இருப்பர். இங்கு எந்த ராசியினர் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்று பாப்போம்.
ALSO READ: சாமுத்திரிகா சாஸ்திரம்: உங்கள் உடலின் ‘இந்த’ பாகங்கள் துடிக்கிறதா; எச்சரிக்கை!
சிம்மம்: பொதுவாக, சிம்ம ராசிக்காரர்களின் உருவம் ஆதிக்கம் செலுத்தும், வலிமையான மற்றும் சில நேரங்களில் திமிர்பிடித்த நபராக இருக்கும், ஆனால் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களால் மட்டுமே அவர்களுக்குள் மறைந்திருக்கும் சுத்தமான இதயத்தை அடையாளம் காண முடியும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சுத்தமான இதயம் கொண்டவர்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவர்களாகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மக்களை எளிதில் நம்புவதால் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் எளிதானது.
மீனம்: அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் மீன ராசியினர். இவர்கள் குறித்து புகார் எழும்போது, திடீரென இவர்கள் கண்கலங்கக் கூடியார்களாக இருப்பார்கள். இவர்களை இந்த நேரத்தில் தனியாக விடாமல் இருப்பது நல்லது. இவர்களிடம் மன ஆறுதலாக, மன அமைதிக்காக பேச இவர்கள் வேகமாக பழைய நிலைக்கு மீண்டு வருவார்கள்.
ALSO READ: திருவண்ணாமலை தீபம் குறித்த இந்த முக்கியத் தகவல்கள் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR