இவர்கள்தான் அவசரக்குடுக்கையாக இருந்து அவதிப்படும் ராசிகள்: உங்க ராசியும் இதுவா?
Astrology: சில ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் வேகம் காட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க விரும்புகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ராசியின் மூலம், அந்த நபரின் எதிர்காலம் குறித்து பல விஷயங்களை அறிய முடியும். ஒவ்வொரு ராசியும் சில கிரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
கிரகங்களின் தாக்கத்தால், சில ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் வேகம் காட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். இவர்கள் காட்டும் வேகத்தால் சில நேரங்களில் கடும் நஷ்டத்தையும் இவர்கள் சந்திக்க வேண்டி வருகிறது. அவசரத்தால் சில சமயம் அதிர்ஷ்டத்தையும் சில சமயம் அவதியையும் எதிர்கொள்ளும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கின் கீழ் இருப்பவர்கள். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆற்றல் அதிகமாக இருக்கும். இவர்கள் எந்த வேலையையும் தாமதப்படுத்த விரும்ப மாட்டார்கள். இவர்கள் அனைத்திலும் அவசரப்படும் வழக்கம் உடையவர்கள். இருப்பினும், அவர்களின் இந்த இயல்பு சில நேரங்களில் அவர்களுக்கு நன்மையையும் அளிக்கிறது. ஆனால், சில சமயங்களில் அவர்களும் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
மேலும் படிக்க | இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மீது சுக்ர பகவானின் தாக்கம் உள்ளது. இந்த ராசிக்காரர்கள் அவசர அவசரமாக சில வேலைகளைச் செய்வார்கள். இதனால் பல நேரங்களில் இவர்களின் பணி கெட்டு விடுகிறது. பல முக்கியமான பணிகளிலும் இவர்கள் அவசரப்பட்டு முடிவெடுக்கும் பழக்கம் உடையவர்கள். அதிகம் யோசிக்காமல் உடனே பல முடிவுகளை எடுத்து விடுவார்கள். இதனால், இவர்கள் பின்னர் வருத்தப்பட வேண்டி வருகிறது. இவர்களது இந்த பழக்கம் சில சமயங்களில் இவர்களை சிக்கலில் மாட்டி விடுகிறது.
துலாம்
துலா ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களாலும் விரைவாக ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் அனைத்து பணிகளையும் நிமிடங்களில் முடிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வேலையில் அவசரம் காட்டுவதால், சில விஷயங்களில் வாழ்க்கையில் பின்தங்கி விடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பின் வலிமையால் வாழ்க்கையில் பலவற்றை சாதிக்கிறார்கள். இருப்பினும், இந்த ராசிக்காரர்களுக்கு பொறுமை குறைவு. அவர்கள் எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய விரும்புகிறார்கள். இதனால் பலமுறை இவர்கள் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டி வருகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காதலர் தினம் 2022: இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான மனைவிகள், அட்டகாசமான காதலிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR