பிப்ரவரியில் கிரகங்களின் மாற்றத்தால் 6 ராசிக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: உங்க ராசி என்ன?

February Horoscope: 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதம் ஒன்றல்ல இரண்டல்ல 5 கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2022, 05:22 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும்.
  • துலா ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்.
பிப்ரவரியில் கிரகங்களின் மாற்றத்தால் 6 ராசிக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: உங்க ராசி என்ன? title=

கிரகங்களின் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களும், நம் வாழ்க்கையையும், நாட்டையும், உலகையும் பாதிக்கிறது. இந்த விஷயத்தில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதம் ஒன்றல்ல இரண்டல்ல 5 கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இது மட்டுமின்றி, ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் கிரகங்கள் இவை.

2022 பிப்ரவரியில் புதன், சூரியன், வியாழன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய ராசிகளின் மாற்றத்தால் உருவாகும் நட்சத்திரங்களின் நிலை 6 ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) மிகவும் சாதகமாக அமையப் போகின்றன. 

மேஷம்  (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவகுரு வியாழன் மற்றும் சனி பகவானின் அருளால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இருப்பினும் குடும்பம், உடல் நலம் போன்ற விஷயங்களில் சற்று கவனம் தேவை.

ரிஷபம் (Taurus)

ரிஷப (Taurus) ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் திட்டத்தின்படி அனைத்து வேலைகளும் நடைபெறும். தடைப்பட்டிருந்த பணம் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கன்னி (Virgo)

இந்த நேரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும்.

ALSO READ | புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம்: 4 ராசிக்காரர்கள் மீது நேரடி தாக்கம்

துலாம் (Libra)

துலா ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த நேரம் வேலை அல்லது வியாபாரம் இரண்டிற்கும் சாதகமாக இருக்கும். ஆகையால் துலா ராசிக்காரர்கள் இந்த வேளையில் அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழிலில் பெரும் வெற்றியை தரும் நேரமாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண வரவால் சாதகமான பல பணிகள் நடக்கும். 

மீனம் (Pisces)

மீன (Pisces) ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். புதிதாக எடுக்கும் முயற்சிகள் நல்லபடியாக நடக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | Numerology: புதனின் பரிவர்த்தனையால் பணமழையில் நனையப் போவது நீங்களா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News