இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

இன்று கிரகங்களின் ராஜாவான சூரியன் கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த ராசியில் ஒரு மாதம் தங்கி 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தருவார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 13, 2022, 08:29 AM IST
  • இன்று கும்ப சங்கராந்தி
  • சூரியன் கும்ப ராசியில் நுழைந்தார்
  • 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் title=

புதுடெல்லி: ஜோதிடத்தில் கோள்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்களின் ராஜாவான சூரியனின் ராசி மாற்றம் அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று அதாவது பிப்ரவரி 13, 2022 அன்று சூரியன் மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். சனியின் ராசியில் சூரியன் நுழைவது சில ராசிக்கு நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும். ஆனால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சூரியனின் மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சூரியனின் பிரவேசம் வியாபாரத்தில் பெரிய பலன்களைத் தரும். பெரிய ஒப்பந்தம் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பணத்தால் நன்மை உண்டாகும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

மிதுனம்: சூரியனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். பணம் சம்பாதிப்பார்கள். நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும். வங்கி இருப்பு மற்றும் சொத்துக்கள் அதிகரிக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குறிப்பாக அரசியலுடன் தொடர்புடையவர்கள் பெரும் வெற்றியைப் பெறலாம். பெரும் பண ஆதாயங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் தரும். பதவி உயர்வு மற்றும் பண ஆதாயம் ஏற்படலாம். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு பணம் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கலாம். பழைய ஆசைகள் நிறைவேறும்.

கும்பம்: சூரியனின் ராசி மாற்றத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் வந்து சேரும். சிக்கிய பணமும் கிடைக்கும். எதிலும் வெற்றி பெற்று உற்சாகமாக இருப்பீர்கள். மரியாதை அதிகரிக்கும். வெளியூர் சம்பந்தமான வேலைகள் கூடும். ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News