டிசம்பரில் வரும் சூரிய கிரகணம் இந்த 5 ராசிகளை பாடாய் படுத்தும்: ஜாக்கிரதை!!
இந்த 5 ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய கிரகணம் அசுப நிகழ்வுகளின் காரணியாக மாறும். இந்த சூரிய கிரகணம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும் என்பதை ஜோதிட கணக்கீடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Surya Grahan 2021: 2021ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்திற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. டிசம்பர் 4, 2021 அன்று நிகழவிருக்கும் இந்த கிரகணம் ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும்.
இந்த கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும். இந்த சூரிய கிரகணம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். இதன் விளைவு சில ராசிக்காரர்களுக்கு நல்லதகாவும் சிலருக்கு கெட்டதாகவும் இருக்கும்.
குறிப்பாக, இந்த 5 ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய கிரகணம் அசுப நிகழ்வுகளின் காரணியாக மாறும். இந்த சூரிய கிரகணம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும் என்பதை ஜோதிட கணக்கீடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ராசிக்காரர்களுக்கு கிரகணம் அசுபமானதாக இருக்கும்
2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 4 டிசம்பர் 2021 சனிக்கிழமை அன்று நிகழும். இந்த நாள் கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை தினமாகும். இதற்கு 15 நாட்களுக்கு முன்பு கார்த்திகை மாத பௌர்ணமி அன்று சந்திர கிரகணம் ஏற்பட்டது.
இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 4 ஆம் தேதி காலை 10:59 மணிக்கு தொடங்கி மதியம் 03:07 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணம் கீழ்வரும் 5 ராசிக்காரர்களுக்கு உகந்தது அல்ல.
மேஷம் (Aries): இந்த சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு அசுபமானது. இது அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக, மேஷ (Aries) ராசிக்காரர்கள் சில நோய்களின் பிடியில் சிக்கலாம், அல்லது, ஏதேனும் விபத்துக்குள்ளாகலாம்.
ALSO READ:செவ்வாய்ப் பெயர்ச்சி: இந்த ‘5’ ராசிக்கார்களுக்கு டிசம்பர் 5 வரை எச்சரிக்கை தேவை!
கடகம் (Cancer): கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் அசுப பலன்களைத் தரும். இந்த கிரகணத்தின் போது வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். நண்பர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பேசும்போது கவனமாக இருங்கள். உங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள்.
துலாம் (Libra): சூரிய கிரகணம் துலாம் (Libra) ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும். கோபப்படுவதை தவிர்க்கவும். பிறரிடம் கோவப்படுவதாலோ, திட்டுவதாலோ நீங்கள் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளலாம். இந்த கிரகணம் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
விருச்சிகம் (Scorpio): விருச்சிக ராசிக்காரர்களின் மனதில் சூரிய கிரகணம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். பதற்றம், அமைதியின்மை ஆகியவை ஏற்படலாம். விருச்சிக ராசிக்காரர்கள் குழப்பத்தில் விழ வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பொறுமையாக இருப்பது நல்லது.
தனுசு (Sagittarius): தனுசு (Sagittarius)ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். இந்த கிரகணத்தின் போது செலவுகள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பயணங்கள் இருக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ:Astrology: மக்களே! இந்த ராசிக்காரங்க கிட்ட மன்னிப்பை எதிர்பார்க்காதீங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR