குழந்தைகளுடன் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நீங்கள் அடிக்கடி உங்கள் குடும்பத்துடன் காரில் பயணம் செய்பவராக இருந்தால், அதுவும் குறிப்பாக சிறு குழந்தைகள் உங்கள் குடும்பத்தில் இருந்தால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
குழந்தைகளை வீட்டில் வைத்து பார்த்து கொள்வது இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. அதுவும் தற்போது கோடை விடுமுறையில் டபுள் டாஸ்காக உள்ளது. விடுமுறை தினங்களில் பலரும் தங்கள் குடும்பத்துடன் வெளியில் செல்ல திட்டமிடுகின்றனர். வீட்டிற்கு அருகில் உள்ள இடங்களுக்கோ, பீச், தியேட்டர் அல்லது வெளியூர்களுக்கோ செல்ல விரும்புகிறார்கள். பொதுவாக பயணம் செய்திட பஸ் அல்லது விமானத்தை விட கார் மிகவும் உதவிகரமாக இருக்கும். சாலை வழியாக காரில் செல்லும் போது நமக்கு வேண்டிய இடத்தில் நிறுத்தி கொள்ளலாம். இது உதவிகரமாக இருந்தாலும், குடும்பத்தில் சிறு குழந்தைகளை கொண்டவர்கள் காரில் பயணம் செய்யும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
சிறிய குழந்தைகள் இருந்தால் எப்போதும் இல்லாத புதிய இடங்களுக்குச் செல்லும் போது குழந்தைகள் பயப்படுகின்றனர். இதனால் வருத்தமடைந்து அல்லது எரிச்சலடைந்து அழத் தொடங்குகின்றனர். இது பெற்றோர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும், சில சமயம் சுற்றி உள்ளவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். மேலும் அந்த நாளையே கெடுத்து விடும். எனவே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சாலை மார்க்கமாக காரில் செல்ல திட்டமிட்டால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இது உங்கள் பயணத்தை மகிழ்ச்சியானதாக மாற்றும்.
காரில் செல்லும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
உங்கள் குடும்பத்தில் 5 வயதிற்கும் கம்மியான குழந்தை இருந்தால், டிரஸ் பேக்கிங் செய்யும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான விஷயங்களை மறக்காமல் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் குடும்பத்தில் 2 வயதுக்குட்பட்ட குழந்தை இருந்தால் கூடுதல் ஆடைகளை எடுத்து செல்வது நல்லது. ஏனெனில் குழந்தைகள் பயணத்தின் போது வாந்தி எடுக்க வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற சூழ்நிலையை சமாளிக்க முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பது நல்லது. மேலும், குழந்தைகளை மடியில் உட்கார வைக்கும் போது லேசான ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. இது குழந்தைகளுக்கு எரிச்சல் உணர்வை ஏற்படுத்தாது. அதே சமயம் பெற்றோர்களும் சில கூடுதல் ஆடைகளை எடுத்து கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு கொடுக்கும் உணவு குறிப்பாக பால் பவுடர், டயப்பர்கள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை வைத்திருப்பது நல்லது. 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் வீட்டில் இருந்தே சாப்பிட வேண்டிய பொருட்களை கொண்டு செல்லுங்கள். பயணத்தின் போது வெளியில் சாப்பிடுவது குழந்தைகளுக்கு நல்லது இல்லை. பழங்கள், பிஸ்கட்டுகள் போன்றவற்றை கொண்டு செல்லலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை.
அதே போல குழந்தைகளுடன் காரில் செல்லும் போது நீண்ட பயணத்தை திட்டமிட வேண்டாம். இது அவர்களுக்கு அசவுகரியத்தை கொடுக்கும். எனவே குறுகிய பயணத்தை திட்டமிடுவது நல்லது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் ரயில் அல்லது விமான சேவையை பயன்படுத்துவது நல்லது. அதே போல காரில் செல்லும் போது சரியான திட்டமிடலுடன் செல்வது நல்லது. இதன் மூலம் எங்கு சாப்பிடுவது, எங்கு தங்குவது போன்ற யோசனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ