வாகனம் வாங்குவதற்கோ, பிள்ளைகளின் மேல் படிப்பு செலவுக்கோ, திருமண செலவுகளுக்கோ அல்லது வேறு ஏதேனும் நிதி தேவைகளுக்கோ அதனை சமாளிக்க உங்களுக்கான வழி தனிநபர் கடன் பெறுவது தான்.  நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தவுடன் உங்கள் கிரெடிட் மதிப்பெண்னின் அடிப்படையில் உங்களுக்கு வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும்.  அதேசமயம் உங்கள் வட்டி விகிதத்தை பாதிக்கக்கூடிய சில காரணிகள் உள்ளது, அதனை நீங்கள் முறையாக கண்காணிப்பதன் மூலம் வட்டியில் பெரியளவு பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) வருமானம்:


ஒருவரின் கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காரணி வருமானம், கடன் பெறும் நபரின் சம்பளம் அதிகமாக இருந்தால் அவர் சரியான தேதியில் தவணையை செலுத்திவிடுவார்.  எனவே, உங்கள் வருமானம் அதிகமாக இருந்தால், சாதகமான வட்டி விகிதத்துடன் தனிநபர் கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 


மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படுமா! 


2) தொழில்:


கடன் வாங்கும்போது, நீங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்களா, அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்களா, சொந்த நிறுவனம் உள்ளதா அல்லது பகுதி நேர அல்லது ஃப்ரீலான்ஸராகப் பணிபுரிகிறீர்களா என்பதையும் வங்கிகள்கவனிக்கும்.  நீங்கள் வேலை புரியும் நிறுவனம் பிரபலமானதாக இருந்தாலோ அல்லது நீங்கள் நீண்ட நாள் பணியனுபவம் பெற்றிருந்தாலோ உங்களுக்கு நல்ல சிறப்பான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும்.  நீங்கள் மருத்துவர், வழக்கறிஞர், வரிக் கணக்காளர், ஆலோசனை கட்டிடக் கலைஞர், வடிவமைப்பாளர், வணிக ஆலோசகர் போன்ற நல்ல தகுதி வாய்ந்த சுயதொழில் நிபுணராக இருந்தால், உங்களுக்கு குறைவான வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் கிடைக்கும்.


3) கிரெடிட் ஸ்கோர்:


கிரெடிட் அல்லது சிபில் மதிப்பெண் தான் ஒருவரது கடன் தகுதியினை தீர்மானிக்கிறது.  உங்கள் முந்தைய கட்டண வரலாறு போன்ற அனைத்து வித தகவலும் சிபில் மதிப்பெண்ணில் பதிவு செய்யப்பட்டிருக்கும். உங்களது சிபில் மதிப்பெண் நல்ல நிலைமையில் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு குறைவான வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை நம்பிக்கையாக வழங்கும்.  


4) கடன் திருப்பிச் செலுத்துதல்:


கடன் தொகையை திரும்பி செலுத்தும் விதம் மற்றும் விடுபட்ட தவணை தொகை ஆகியவை உங்களது கிரெடிட் ஸ்கோரை கடுமையாக பாதிக்கும்.  மோசமான கிரெடிட் ஸ்கோர் தனிநபர் கடன் வட்டி விகிதங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.  அதனால் இதற்கு முன்னர் நீங்கள் கடன் பெற்றிருந்தால் சரியான தேதியில் தவணை தொகையை செலுத்தியிருக்க வேண்டியது உங்களுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடனை பெற உதவும்.


5) தற்போதைய கடன்கள்:


தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் போது கடன் வழங்குபவர், உங்களின் தற்போதைய கடனை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்.  மற்றொரு கடன் நிலுவையில் இருந்தால் கடன் வழங்குபவருக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும், அதனால் அந்த கடனையும் நீங்கள் சரியான தேதியில் செலுத்தியிருக்க வேண்டிய அவசியம்.


6) பொருளாதார நிலை:


வேலையின்மை, பொருளாதாரம், ரெப்போ விகிதங்கள் போன்ற இன்னும் பல காரணிகளால் தனிநபர் கடனின் விலை பாதிக்கப்படுகிறது.  பணவீக்கத்தால் சில சமயங்களில் தனிநபர் கடன்களுக்கு அதிக கடன் விகிதங்களை வசூலிக்கின்றனர்.  தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது நீங்கள் கடனை பெற முயற்சிக்கலாம்.


மேலும் படிக்க | Budget 2023: நிதி அமைச்சகம் அளித்த நல்ல செய்தி, இனி இதற்கு GST கிடையாது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ