மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவனின் இரக்க குணத்தை பாராட்டும் மக்கள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், மனித நேயத்தை அழகாக எடுத்துக்கட்டும் சம்பவம் ஒன்று மிசோரமில் நிகழ்ந்துள்ளது.  மனித குலத்திற்கு அன்பு, இரக்கம், மன்னிப்பு போன்ற குணங்கள் அவசியமானவை என்பதை எந்த சம்பவம் எடுத்துகாட்டுகிறது. 


மிசோரம் மாநிலத்தில் உள்ள சைராங் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் டிரெக் எ லால்சன்ஹிமா. அவன், சைக்கிள் ஒட்டும் போது தவறுதலாக ஒரு கோழிக்குஞ்சு  மீது ஏற்றிவிட்டான். இந்த சம்பவத்தின் போது அந்த கோழிகுஞ்சு பரிதாபமாக உயிரிழந்தது. கோழிக்குஞ்சு இறந்து போனதை அறியாத சிறுவன், கருணையோடு அதை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளான். 


மருத்துவமனையில் பார்ப்பதற்கு பணம் வேண்டும் என்பதால், தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாயை பணத்தையும் எடுத்து சென்றுள்ளான்.  ஒரு கையில் கோழிக்குஞ்சையும் மற்றொரு கையில், 10 ரூபாயுடனும் அப்பாவித்தனமாக சிறுவன் நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. 



சிறுவனின் புகைப்படத்தை பேஸ்புக்கில் முதன் முதலாக பகிர்ந்த சங்கா என்பவர், இது பற்றி கூறும் போது, “ சைக்கிள் ஓட்டி பழகும் போது எதிர்பாராத விதமாக கோழிக்குஞ்சு மீது டிரெக் ஏற்றிவிட்டான். இதில் கோழிக்குஞ்சு பரிதாபமாக இறந்துவிட்டது. ஆனால், கோழிக்குஞ்சு இறந்தை அறியாத சிறுவன், அதை கையில் எடுத்துக்கொண்டு தனது தந்தையிடம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு அடம் பிடித்துள்ளான்.  



ஆனால், நான் வரமாட்டேன், வேண்டும் என்றால், நீயே சென்றுவிடு என சொல்லி இருக்கிறார் அவர் தந்தை. உடனே, தான் வைத்திருந்த 10 ரூபாயை எடுத்துக்கொண்டு சிறுவன் மருத்துவமனைக்கு சென்றுள்ளான். மருத்துவமனையில் உள்ள செவிலியர் சிறுவனை புகைப்படம் எடுத்துள்ளார்” என்றார்.  சிறுவனின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.