திருப்பதி போகும் பக்தர்களுக்கு முக்கிய அப்டேட்: நாளை இலவச தரிசன டிக்கெட் வெளியீடு
இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது மார்கழி மாதம், பெருமாளுக்கு உகந்த மாதம். தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவுள்ள பக்த கோடிகளுக்கு முக்கிய செய்தி!! திருப்பதி கோயிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக, ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதசி திருநாளும் வரவிருப்பதால், பல பக்தர்கள் திருப்பதிக்கு (Tirupathi) செல்ல எண்ணம் கொண்டுள்ளார்கள். ஜனவரி 1 முதல் 12- ஆம் தேதி 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள், ஜனவரி 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கவுள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் நிகழ்வுக்கான பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் என்ற அளவிலும், 23- ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 10 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஆக மொத்தம் 1.60 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | திருப்பதி ஏழுமையான் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம்
இது தவிர 5 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களை கவுண்டர்களில் விநியோகிக்கவும் தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
திருப்பதியில் சாமி தரிசனம் (Tirupathi Darshan) செய்ய, இணையதளம் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொண்டு வரும் பக்தர்கள், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டு நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இது கட்டாய செயல்முறையாக இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றோ அல்லது பரிசோதனை செய்து கொண்ட சான்றிதழோ இல்லாத பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரம், ஒமிக்ரான் அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால், திருப்பதி தேவஸ்தானம், தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பல வித கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ALSO READ | Wealth God: திருப்பதி பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரனின் அருள் பெறும் வழி இதுதான்...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR