திருப்பதி கோவிலில் 2 நாட்களுக்கு பிறகு நடைபாதை திறப்பு

நேற்று முன்தினம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2021, 04:54 PM IST
திருப்பதி கோவிலில் 2 நாட்களுக்கு பிறகு நடைபாதை திறப்பு title=

Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான (Tirumala Tirupati Devasthanams) நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது. மேலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் என்றும் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு 300 ரூபாய் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது.

ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

இந்நிலையில் தற்போது ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோவில் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

சமீப காலங்களில், TTD நிர்வாக அதிகாரி டாக்டர் கே எஸ் ஜவஹர் ரெட்டியின் அறிவுறுத்தலின் கீழ் திருமலை திருப்பதி இல் பல்வேறு புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மலர் செடிகள் மற்றும் மரங்களை உள்ளடக்கிய சம்பிரதாயா தோட்டத்தை உருவாக்கியுள்ளது.

சமீப காலங்களில், TTD நிர்வாக அதிகாரி டாக்டர் கே எஸ் ஜவஹர் ரெட்டியின் அறிவுறுத்தலின் கீழ் திருமலையில் பல்வேறு புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மலர் செடிகள் மற்றும் மரங்களை உள்ளடக்கிய சம்பிரதாயா தோட்டத்தை உருவாக்கியுள்ளது.

அவற்றில் ஏழுமலையானுக்கு தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி குறிப்பிடத்தக்க இடத்தை பெற்று வருகிறது.பவிஷ்யோத்தர புராணத்தின் 13 ஆம் அத்தியாயத்தில் உள்ள 33 மற்றும் 34 ஸ்லோகங்களில் அரசர் தொண்டைமான் சக்கரவர்த்தியிடம் ஏழுமலையான் தனக்கான கோவிலைக் கட்டும் போது கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சம்பங்கி தோட்டத்தை அகற்ற வேண்டாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோவிலில் உள்ள ஒரு பகுதி தற்போது சம்பங்கி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் தற்போது ஏழுமலையானின் தலவிருட்சமாக சம்பங்கி மரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் திருப்பதியில் தொடர் மழை காரணமாக பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டது.

இந்நிலையில் தற்போது மழை வெள்ளம் வடிய தொடங்கியதால் இன்று காலை முதல் நடைபாதையில் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தனால் பக்தர்கள் உற்சாகத்தில் நடைபாதை வழியாக சென்று சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News