Tirupati, Vaikunta Ekadashi Special Ticket : திருப்பதி திருமலையில் இருக்கும் வெங்கடாஜலபதியை உலகம் முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். தினம்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதும் திருப்பதியில் இப்போது வருடந்தோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கோலாகலகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க மக்கள் கூட்டம் வழக்கம்போல் திருப்பதியில் அலைமோதுகிறது. பக்தர்கள் தங்கும் விடுதி எல்லாம் நிறைந்துள்ளன. அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழா அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதி பிரம்மோற்சவ விழா


விழாவின் முக்கிய சேவையாக பார்க்கப்படும் தங்க கருட வாகன சேவை அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி லட்க்கணக்கான பக்தர்கள் திருப்பதி திருமலையில் குவிந்து ஏழுமலையானை மனமுருக தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே பிரம்மோற்சவ விழாவுக்கு இதில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தரிசனத்துக்கு சுமார் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.


மேலும் படிக்க | திருப்பதி பிரமோற்சவத்திற்காக சிறப்பு ரயில், டிக்கெட் விலையும் மிக மிக குறைவு


திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்


இந்த விழாவுக்கு அடுத்தபடியாக திருப்பதி திருமலையில் வெகு சிறப்பாக நடைபெறும் விழா என்றால் அது சொர்க்க வாசல் திறப்பு தான். இதில் கலந்து கொள்ள ஏற்கனவே நாடு முழுவதும் லட்சகணக்கான பக்தர்கள் காத்திருக்கிறார்கள். நவம்பர் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், டிசம்பர் மாதம் டிக்கெட்டுகள் எப்போது வெளியிடப்படும் என ஏழுமலையான் பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த டிக்கெட் மூலம் சொர்க்கவாசல் திறப்பையும் பார்த்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.


வைகுண்ட ஏகாசதி சொர்க்க வாசல் திறப்பு ; 


உண்மையில், 2024 ஆம் ஆண்டு சொர்க்க வாசல் திறப்பே இந்த ஆண்டு கிடையாது. வைகுண்ட ஏகாதசி இந்த முறை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் வருகிறது. அதாவது, 2025 ஆம் ஆண்டு இரண்டு சொர்க்க வாசல் திறப்புகள் இருக்கின்றன. ஜனவரி மாதம் 09, 2025 அன்று பிற்பகல் 12:22 முதல் ஜனவரி 10, 2025 அன்று காலை 10:19  மணியுடன் முடிவடைகிறது. அதேபோல் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30, 2025 அன்று காலை 07:50  மணிக்கு தொடங்கி  டிசம்பர் 31, 2025 அன்று காலை 05:00  மணிக்கு ஏகாதசி திதி முடிகிறது. ஜனவரி 2025 ஆம் ஆண்டு சொர்க்க வாசல் விழா சுமார் 10 நாட்கள் திருப்பதி  திருமலையில் நடக்க இருக்கிறது. அப்போது சுமார்  8 லட்சம் பக்தர்கள் இந்த தரிசனத்தை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


மேலும் படிக்க | பஸ் vs ரயில் : திருப்பதிக்கு எதில் சென்றால் கட்டணம் குறைவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ