பஸ் vs ரயில் : திருப்பதிக்கு எதில் சென்றால் கட்டணம் குறைவு

Tirupati : திருப்பதி செல்ல வேண்டும் என்றால் பேருந்து அல்லது ரயில் எது சிறந்தது என பார்க்கலாம்.

Tirupati Bus Train Fare News : திருப்பதி செல்ல விரும்புபவர்களுக்கு பயண கட்டணம் ரீதியாக எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.

 

1 /9

திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்தியா முழுவதும் இருந்து ரயில் மற்றும் பேருந்து வசதிகள் திருப்பதிக்கு இருக்கிறது.

2 /9

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களுக்கு பேருந்தில் செல்வதற்கும், ரயிலில் செல்வதற்கும் கட்டண ரீதியாக எவ்வளவு வித்தியாசம் வரும் என்பதை பார்க்கலாம்.

3 /9

சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி பயணிகள் ரயிலே இருக்கிறது. இதில் டிக்கெட் கட்டணம் குறைவு தான். குறைந்தபட்சம் ஒருவருக்கு 80 ரூபாய் இருந்தால் திருப்பதி சென்றுவிடலாம். பேருந்து கட்டணம் 150 ரூபாய் முதல் இருக்கிறது. பேருந்துகளின் வகையை பொருத்து கட்டணம் மாறுபடும்.   

4 /9

கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக ரயில் மற்றும் பேருந்து வசதிகள் இருக்கின்றன. பேருந்துகளில் என்றால் குறைந்தபட்சம் ஒருவருக்கு 800 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். ரயிலில் ஸ்லீப்பர் 285 ரூபாய் மட்டுமே. 

5 /9

தேனியில் இருந்து திருப்பதி சென்றால் பேருந்துக்கு குறைந்தபட்சம் ஒருவருக்கு 700 ரூபாய், ரயிலுக்கு 400 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் தேனி மற்றும் மதுரையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில்களின் எண்ணிக்கை குறைவு. வாராந்திர நாட்களில் வரும் ரயில்களை பார்த்து டிக்கெட் புக் செய்து கொள்ள வேண்டும். 

6 /9

சேலம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்து மற்றும் ரயில் வசதி இருக்கின்றன. பேருந்துகளில் குறைந்தபட்சம் 400 ரூபாய், ஏசி பேருந்துகளில் 500 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். சில பேருந்துகளில் கட்டணம் கூடுதலாக இருக்ககூட வாய்ப்பு இருக்கிறது. ரயிலில் பயணித்தால் ஒருவருக்கு வெறும் 240 ரூபாய் மட்டுமே. அதுவும் ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கலாம்.

7 /9

திருச்சியில் இருந்து திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றால் ரயிலில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட் 415 ரூபாய், பேருந்து கட்டணம் 800 ரூபாய் தோராயமாக இருக்கும். நபர் ஒருவருக்கு இவ்வளவு தொகை செலுத்த வேண்டியிருக்கும். 

8 /9

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் அருகாமையில் இருக்கும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்று அங்கிருந்து எந்நேரமும் இருக்கும் பேருந்து, ரயில் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும்.

9 /9

கட்டண அளவில் பார்க்கும்போது திருப்பதிக்கு செல்ல பேருந்தைவிட ரயிலே சிறந்தது என சொல்லலாம். ரயில் நிலையம் அருகாமையில் இல்லாதவர்கள் பேருந்து பயணத்தை தேர்வு செய்யலாம். தொலைவின் அடிப்படையில் ரயிலை தேர்வு செய்வதே சிறந்தது. ஏனென்றால் குடும்பத்துடன் செல்லும்போது ரயிலில் கழிவறை வசதியெல்லாம் இருக்கிறது. எந்தநேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சவுகரியம் வேண்டாம் என்றால் பேருந்து பயணத்தையே தேர்வு செய்து கொள்ளுங்கள்.