திருப்பதி பிரமோற்சவத்திற்காக சிறப்பு ரயில், டிக்கெட் விலையும் மிக மிக குறைவு

Tirupati special train : திருப்பதி பிரோமோற்சவத்திற்காக சென்னை -  ரேணிகுண்டா இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு எஸ்பிஎல் சேவையை ரயில்வே இயக்க உள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Oct 11, 2024, 09:56 AM IST
  • திருப்பதி சிறப்பு ரயில் அறிவிப்பு
  • சென்னையில் இருந்து புறப்படும்
  • முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை
திருப்பதி பிரமோற்சவத்திற்காக சிறப்பு ரயில், டிக்கெட் விலையும் மிக மிக குறைவு

திருப்பதி கோயில் வருடாந்திர பிரமோற்சவம் அக்டோபர் 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த ஆண்டு பிரமோற்சவம் அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி வெங்கடாஜலபதி பிரமோற்சவம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு ஏழு மணி முதல் ஒன்பது வரை வாகன சேவைகள் நடைபெற இருக்கின்றன. கருட சேவை மாலை 6.30 மணிக்கும் நடக்கும். 

Add Zee News as a Preferred Source

சேவைகள் ரத்து

பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதியோர், ஊனமுற்றோர் கை குழந்தைகளின் பெற்றோர் போன்றோருக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புரோட்டோகால் விஐபிக்களுக்கு மட்டுமே பிரேக் தரிசனம் வழங்கப்படும். கருடசேவை நாளான 8-ம் தேதி விஐபி பிரேக் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி டிக்கெட் கட்டணம்

ஏழுமலையான் ஆண்டு பிரம்மோற்சவத்துக்கு 1.32 லட்சம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தினமும் 24,000 சர்வதரிசன டோக்கன்கள் வழக்கம் போல் வழங்கப்படும் என்றும், அங்கப்பிரதக்ஷிண டோக்கன்கள் பிரம்மோற்சவ நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை என்ன? ஏழுமலையானே பார்த்துக் கொள்வார்! நாளை மகாசாந்தி ஹோமம்!

திருப்பதி சிறப்பு ரயில்

திருப்பதி பிரமோற்சவத்தையொட்டி திருப்பதிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் புறநகர் - ரேணிகுண்டா - சென்னை சென்ட்ரல் புறநகர் மெமு, முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் புறநகர்  இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு இயக்கப்படும். அதாவது, அக்டோபர் 5 ஆம் தேதி சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கும், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 5 மற்றும் 6ம் தேதி மாலை 6 மணிக்கும் திரும்பும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருப்பதி கோவை சிறப்பு ரயில்

அக்டோபர் 03 முதல் அக்டோபர் 15 வரை கோவையில் இருந்து புறப்படும் ரயில் எண் 22616 கோயம்புத்தூர் - திருப்பதி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 03 முதல் அக்டோபர் 16 வரை திருப்பதியில் இருந்து புறப்படும். ரயில் எண் 22615, திருப்பதி - கோயம்புத்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22617 திருப்பதி - எஸ்எம்விடி பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் காட்பாடி, ஜோலார் வழியாக திருப்பதி வழியாக புறப்படும் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட இருக்கின்றன. அக்டோபர் 04 முதல் அக்டோபர் 15 வரை இந்த பெட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், 22618 எஸ்எம்விடி பெங்களூரு - திருப்பதி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக எஸ்எம்விடி பெங்களூரில் இருந்து அக்டோபர் 05 முதல் அக்டோபர் 16, 2024 வரை இயக்கப்படும். எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கூட்ட நெரிசல்

திருப்பதியில் பிரோமற்சவ விழா கோலாகலமாக நடைபெற இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் முதியோர், கைக்குழந்தைகள் சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் திருப்பதி செல்வது குறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு திருப்பதி செல்லும் பக்தர்கள் பயணத்தை திட்டமிடுவது நல்லது. 

மேலும் படிக்க | திருப்பதி போறவங்களுக்கு குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.

...Read More

Trending News