தமிழகத்தில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று முதல் தொடங்கி வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு முகாம் மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற்று வருகின்றது. மேலும் பண்டிகை தினத்தை தவிர்த்து, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்ப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் மக்களின் சந்தேகதிற்கு விளக்கமாக மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று வாரியம் தெரிவித்துள்ளது, மேலும் கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | LPG Gas விலை குறையும்! நம்பிக்கை கொடுக்கும் அரசின் சிறப்புத் திட்டம் 




இது தவிர மக்கள் ஆன்லைன் மூலமும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அதன்படி ஆன்லைனில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? யாரெல்லாம் இணைக்க வேண்டும் என்பதற்கான முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.


* முதலில் TNEB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://nsc.tnebltd.gov.in/adharupload/ ஐப் பார்வையிடவும்.


* அங்கு ஆதார் இணைப்புக்கான படிவம் இருக்கும், அதில் உங்கள் TANGEDCO சேவை இணைப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.


* பின்னர் OTP ஐ உருவாக்குவதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணை உறுதிப்படுத்த வேண்டும்.


* OTP ஐ உள்ளிட்டு உங்கள் TANGEDCO கணக்கைச் சரிபார்க்கவும்.


* அதன்பின் குடியிருப்போர் விவரங்களை உள்ளிடவும்.


* TANGEDCO கணக்குடன் இணைக்கப்பட வேண்டிய உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.


* பின்னர், ஆதாரில் உங்கள் பெயரை உள்ளிடவும், அதன் பின் உங்கள் ஆதார் ஐடியைப் பதிவேற்றவும்.


* இறுதியாக படிவத்தைச் சமர்ப்பித்து, ஒப்புகை ரசீதைப் பதிவிறக்கவும்.


இதற்கிடையில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோரிடம் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரவாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவுப்படி அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மின்சாரவாரியம் கூறியுள்ளது.


மேலும் படிக்க | டிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ