இன்றைய (03-07-2018) முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

> ஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம்! தமிழக முதல்வர்!


ஹஜ் பயணத்துக்கு ரூ. 6 கோடி மானியம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 


> கோச்சடையான் வழக்கு! லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை!


ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்திற்காக வாங்கிய நிலுவையை தொகையை எப்போது திருப்பி தருவீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் லதா ரஜினிகாந்துக்கு இன்று கேள்வி எழுப்பியுள்ளது. 


> மும்பையில் பலத்த மழை! மக்கள் வாழ்க்கை பாதிப்பு!


மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


> சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் முன் ஜாமின் கோரி கோர்ட்டில் மனு தாக்கல்!


சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர்  இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.


> “பார்ட்டி” : சூர்யா, கார்த்தி குரலில் ‘ச்சா ச்சா ச்சாரே’ பாடல் வெளியீடு! Watch


வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “பார்ட்டி” படத்தின் ‘ச்சா ச்சா ச்சாரே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.


> தமிழ்படம் 2: புதிய போஸ்டர் மூலம் சென்சார் ரிசல்ட் அறிவிப்பு!


சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியானதற்கு பாகுபலி படத்தில் வரும் காட்சியை பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்கள் படக்குழு. 


மக்களை மகிழ்வித்த தமிழகத்தின் நள்ளிரவு மழை!


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.


> டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!


டெல்லியில் இன்று அதிகாலை 3.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி உள்ளது.


> அந்தேரி அருகே பாலம் இடிந்து விழுந்தது! 2 பேர் காயம்!


அந்தேரி ரயில் நிலையம் அருகே அந்தேரி  கிழக்கு பகுதியையும் மேற்கு பகுதியையும் இணைக்கும் கோகலே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை 2 பேர் காயமடைந்தனர்.


> தொடர் மழை! அந்தேரி பகுதியின் பாலம் இடிந்து விபத்து!


மும்பையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையின் அந்தேரி பகுதியின் கோகலே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.


> பெட்ரோல், டீசல்: நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலை


பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!