Tomato Free Recipe Tamil : தக்காளி பிரியர்களுக்கு இந்த மழைகாலம் கஷ்டகாலமாகியிருக்கிறது. வடகிழக்கு பருவமழையால் இந்தியா முழுவதும் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்திருக்கிறது. இதனால், தாறுமாறாக தக்காளி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 100 ரூபாய்க்கு குறைவான விலையில் தக்காளி விற்றாலும் சில மாநிலங்களில் செஞ்சூரி அடித்துவிட்டது தக்காளி விலை. இதனால், தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வகைக்கலாம்? என்னென்ன ரெசிபி இருக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், இங்கே அந்த சூப்பரான ரெசிபியை தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நர்த்தங்காய் குழம்பு


தேவையான பொருட்கள்


* நர்த்தங்காய் மூன்று எடுத்துக் கொள்ளுங்கள். அதை அனைத்தையும் இரண்டாக அறுத்து சாறு பிளிந்து கொள்ளுங்கள். 


* 1 டீஸ்பூன் அளவுக்கு புளி பேஸ்ட். 


* மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்


* தேவைக்கேற்ப உப்பு


* வெல்லம் 1 டீஸ்பூன்


* எண்ணெய் 2 டீஸ்பூன்


* கடுகு 1 டீஸ்பூன்


* கறிவேப்பிலை சிறிது


* அசாஃபோடிடா 1/2 டீஸ்பூன்


வறுக்க தேவையான பொருட்கள்


* பச்சை அரிசி 1 டீஸ்பூன்


* வெந்தயம் விதைகள் 1/2 டீஸ்பூன்


* துவரம் பருப்பு அல்லது பட்டாணி 1 டீஸ்பூன்


* கொத்தமல்லி 1 டீஸ்பூன்


* மிளகாய் 3-4


மேலும் படிக்க | கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: சீடை செய்முறை!


நார்த்தங்காய் குழம்பு செய்முறை


1. ஏற்கனவே கூறியதுபோல் மூன்று நார்த்தங்காய் எடுத்து இரண்டு கட்செய்து அதில் இருந்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.


2. பின்னர், கடாயை சூடாக்கவும். சூடானதும், பச்சை அரிசி மற்றும் வெந்தய விதைகளைச் சேர்த்து, அரிசி, வெந்தய விதைகள் பழுப்பு நிறமாகவும் நறுமணமாகவும் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அதனை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


3. அதே கடாயில், துவரம் பருப்பு, கொத்தமல்லி மற்றும் மிளகாய் சேர்த்து, பருப்பு பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். அதையும் எடுத்து ஒரு தட்டில் எடுத்து சூடு ஆறும் வரை வைக்கவும்.


4. சூடு ஆறிய பிறகு வறுத்த பொருட்கள் இரண்டையும் மிக்சியில் மாற்றி, பொடியாக அரைக்கவும்.


5. இப்போது அதே கடாயில் எள் எண்ணெயை ஊற்றவும். சூடானதும் கடுகு தாளித்து சேர்க்கவும். அவை வெடித்ததும், நறுக்கிய நார்த்தங்காய் தோலை எண்ணெயில் நன்றாக வறுக்கவும்


6. மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, புளியை எண்ணெயில் போட்டு அதன் கூடவே வறுக்கவும். நார்த்தங்காய் தோல் நிறமாறி மென்மையாக மாற வேண்டும். கரண்டியால் தட்டும்போது தோல் கட் ஆகும் வரை வறுக்கலாம்.


7. இப்போது புளி பேஸ்டை சேர்க்கவும். 1 கப் தண்ணீர் சேர்க்கவும். புளியின் பச்சையான சுவை போய், கெட்டியாக வேண்டும். மிதமான தீயில் சுமார் 7 நிமிடங்கள் வரை விடவும்.


8. இப்போது உப்பு, மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் தூள் சேர்த்து, சில நிமிடங்கள் சமைக்கவும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை கிளறவும்.


8. இறுதியாக, நார்த்தங்காய் கறி ரெடியாகிவிட்டது. இந்த கறியை சூடான சாதத்துடன், நெய் சேர்த்து மகிழுங்கள். 


தக்காளி இல்லாமல் சூடான, சூப்பரான ரெசிபி ரெடியாகிவிட்டது. 


மேலும் படிக்க | வெஜ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் செய்முறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ