கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: சீடை செய்முறை!

Last Updated : Aug 14, 2017, 01:31 PM IST
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: சீடை செய்முறை! title=

உப்பு சீடை

தேவையான பொருட்கள்:-

அரிசி மாவு 2 கப் 
வறுத்து அரைத்த ஒரு பிடி உளுத்த மாவு  3 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய்  1 டீஸ்பூன் 
தேவையான அளவு உப்பு 
மிளகுத் தூள்  1 டீஸ்பூன் 
சீரகப் பொடி 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் 1/4 டீஸ்பூன் 
வெண்ணெய் 2 டீஸ்பூன் 
தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் 

செய்முறை: 

முதலில் அரிசியை களைந்து உலர்த்தவும். உலர்த்த அரிசி காய்ந்தவுடன் மிக்சியில் மாவாக அரைத்து, சலித்து வைக்கவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, அத்துடன் எள், துருவிய தேங்காய், சீரகப் பொடி, மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க, உப்பு சீடை ரெடி.

 

வெல்ல (இனிப்பு) சீடை

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி 2 கப் 
வறுத்து அரைத்த ஒரு பிடி உளுத்த மாவு   
வெல்லம் 1 1/2 கப் 
துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன் 
தேவையான அளவு எள் 
ஏலப்பொடி 1/4 டீ ஸ்பூன் 
நெய் 1 டேபிள் ஸ்பூன் 
தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய்  

செய்முறை: 

முதலில் அரிசியை களைந்து உலர்த்தவும். உலர்த்த அரிசி காய்ந்தவுடன் மிக்சியில் மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். பின்பு எள்ளை பொறுக்கி வைக்கவும். தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி அளந்து எடுத்துக்கொள்ளவும். 

ஒரு உருளியில் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போடவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டவும். 

பின் மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், தேங்காய், ஏலப் பொடி இவை மூன்றையும் போட்டு நன்கு கலக்கவும். 

பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, போட்டு இறக்கிவைத்து நெய்யுடன் நன்கு கிளறவும். கொஞ்சம் ஆறினதும் அழுத்தி பிசையவும். 

ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடையை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.

அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.  நன்கு பற்றிய மருதாணி கலறில் வந்தவுடன் எடுக்க, வெல்ல சீடை ரெடி.

Trending News