Tonsils Home Remedies: டான்சில்ஸ் என்பது தொண்டையின் பின்புறத்தில் உள்ள சுரப்பி போன்ற அமைப்புகளாகும். அவை உடலை நோய்த்தொற்றுகளிலிருந்து எதிர்த்துப் போராடவும் பாதுகாக்கவும் உதவுகின்றன. டான்சில்ஸ் தொண்டை வழியாக நுழையும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை சிக்க வைக்க உதவுகிறது, அவை உடலின் மற்ற பகுதிகளை அடைவதற்கு முன்பு அவற்றை நிறுத்துகின்றன. டான்சில்ஸில் உள்ள துளைகள், ஒரு நபர் தனது வாய் வழியாக என்ன உட்கொள்கிறார் என்பதைப் பற்றி நோயெதிர்ப்பு அமைப்புக்கு தெரிவிக்க முடியும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கையாள்வன் காரணமாக, டான்சில்களும் தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றன. டான்சில்லிடிஸ் உள்ள ஒருவர் கழுத்தில் வீங்கிய சுரப்பிகளை உணர முடியும். டான்சில் அறிகுறியாக தொண்டை புண், விழுங்கும் போது வலி, தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கெட்ட சுவாசம், வயிற்று வலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர்காலத்தில் மக்கள் டான்சில் பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கின்றனர். இதன் காரணமாக தொண்டையில் வீக்கம், வலி மற்றும் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பொதுவாக ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது டான்சில்ஸ் பிரச்சனைக்கான முக்கிய காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எதை சாப்பிட்டாலும், குடித்தாலும் உடலில் சிக்கல் ஏற்படுகிறது.  இந்த பிரச்சனை குளிர்காலத்தில் பொதுவானது என்றாலும், நீண்ட நாட்களாக டான்சில்ஸ் பிரச்சனை இருந்தால்,  மருத்துவரை சந்திப்பது நல்லது.  சமையலறையில் உள்ள சில இயற்கை பொருட்களை வைத்து எளிய வீட்டு வைத்தியம் மூலம் டான்சில்ஸ் பிரச்சனையை சரி செய்யலாம்.  


மேலும் படிக்க | நிலத்தடியில் விளைந்தாலும், உடல் ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஊக்கப்படுத்தும் 5 காய்கறிகள்


கிராம்பு


கிராம்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொண்டை வலியை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. டான்சில்ஸ் பெரிதாகி இருந்தால், ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு மென்று தண்ணீர் அருந்துங்கள். 


உப்பு நீர்


டான்சில் பிரச்சனைகளில் இருந்து உடனடியாக விடுபட, உப்பு நீரில் வாய் கொப்புளிப்பதை வழக்கமாக மாற்றுங்கள். இது தொண்டை புண் மற்றும் வலியை குறைத்து வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.  


தேன் மற்றும் மஞ்சள் பால்


தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற பாலில் தேன் மற்றும் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.  தேன் மற்றும் மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன, அவை டான்சில்ஸைப் போக்க உதவுகின்றன. தினசரி சூடான பாலில் மஞ்சள் மற்றும் தேன் கலந்து குடித்தால் இந்த பிரச்சனையை எளிதில் சரி செய்யலாம்.


துளசி


துளசி இலைகளில் பொதுவாக மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. இவை தொண்டை வலியை சரி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற மக்கள் துளசி இலைகளை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகின்றனர். முதலில் துளசி இலைகளை நன்றாக கழுவி, பின்னர் அந்த இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கவும். இதனை தினசரி செய்து வந்தால் தொண்டை வலியை குறைக்கும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆயுளை நீட்டிக்கும் நார்ச்சத்து! கரையாத நார்ச்சத்தும் கரையும் ஃபைபர் சத்தும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ