முழு சந்திர கிரகணம்- திருப்பதி கோவில் 12 மணி நேரம் நடை மூடல்!
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் இன்று 12 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. இந்த கிரகனமானது இன்று இரவு 11.54 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 3.49 மணி வரை நிகழக்கூடும்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் இன்று 12 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. இந்த கிரகனமானது இன்று இரவு 11.54 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 3.49 மணி வரை நிகழக்கூடும்.
இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மாலை 5 மணி நாளை காலை 4.15 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது.
இந்நிலையில் சந்திர கிரகணத்தையொட்டி இன்றி நடைபெற இருந்த கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தான அதிகாரிகள் ரத்து செய்தனர். மேலும் பவுர்ணமி அன்று நடைபெறக்கூடிய கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை அன்னப் பிரசாத கூடமும் மூடப்படவுள்ளது.
கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.