RTO registration: தனி ஆர்டிஓ பதிவு செய்யாமலேயே இந்தியா முழுவதும் பயணிக்கலாம்
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவிப்பு வாகன உரிமையாளர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.
புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவிப்பு வாகன உரிமையாளர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.
ஒரு வாகனத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் தொடர்ந்து பயணம் செய்தால், சம்பந்தப்பட்ட பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office) சென்று வாகனத்தை பதிவு செய்ய வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது, இந்திய அரசு வாகனப் பதிவுக்கான தேசியப் பதிவுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதனால், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களில் 'பிஎச்-சீரிஸ்' ('BH-Series') எண்ணை வைக்க முடியும். இந்தத் தொடரின் கீழ் பதிவு செய்யும் போது, பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, அந்தந்த மாநில பிரந்திய போக்குவரத்து அலுவலகங்களில் வாகனத்தை பதிவு செய்ய வெண்டிய அவசியம் இல்லை.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, வணிக வாகனங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைக் வழங்கும். இந்த புதிய அமைப்பு உண்மையில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே வியாபாரம் செய்யும் வணிக வாகன ஓட்டுனர்களுக்கு சிறந்த வசதியாக இருக்கும்.
பிஎச் தொடர் அவர்களுக்கு நாடு தழுவிய அங்கீகாரத்தை வழங்கும்., இந்த ஏற்பாடு தனியார் வாகன ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அவர்கள் தங்கள் வாகனங்களை மற்ற மாநிலங்களில் பதிவு செய்யவேண்டியிருக்கும். தற்போது அந்த சிக்கலான நடைமுறை முடிவுக்கு வருகிறது.
'BH-Series' என்றால் என்ன?
வாகன உரிமையாளர்களின் தெரிவு இது. இந்த புதிய எண்வரிசையின் கீழ், வாகனத்தை பதிவு செய்யலாமா? வேண்டாமா என்பதை வாகன உரிமையாளரே முடிவு செய்துக் கொள்ளலாம். இந்தப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கட்டாயமில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பாரத் தொடர் பதிவு (Bharat Series Registration Mark) என்பது வாகன பதிவின் புதிய வடிவம். இந்த பதிவு எண்ணில் 'YY BH #### XX' என்ற கிரமத்தில் வாகனம் பதிவு செய்யபப்டும். 'YY' என்பது முதல் பதிவு ஆண்டைக் குறிக்கிறது, 'BH' பாரத் தொடருக்கான குறியீடாக இருக்கும். இதேபோல், '####' என்பது 0000 முதல் 9999 வரையிலான எண்ணாக இருக்கும், மேலும் 'XX' என்பது AA முதல் ZZ வரையிலான எழுத்து ஆகும்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின்படி, ஒரு நபர் தனது வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் சென்றால், அவர் தனது வாகனத்தை 1 வருடத்திற்குள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். வேலை மற்றும் வணிகம் தொடர்பாக மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பெருமளவில் பயணம் செய்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக மெட்ரோ நகரங்கள், பெருநகரங்களில், ஏராளமான மக்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், உள்ளூர் ஆர்டிஓவின் கடுமையான விதிகள் காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு மாநிலங்களுக்கு வாகனங்களை எடுத்துச் செல்வதில் வாகன உரிமையாளர்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், பிஎச்-சீரிஸின் புதிய அமைப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Also Read | அனைத்து வித நெருக்கடியிலும் இந்தியர்களுக்கு துணை நிற்கும் இந்தியா: பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR