நமக்கு 30 வயதைத் தாண்டிய பிறகு நடப்பதில் சில சிரமங்களை எதிர்கொள்கிறோம். இந்த வயதை நாம் எட்டியதும் கைகள், கால்கள் முதல் மூட்டு வலி வரை ஆரம்பித்துவிடுகிறது. அதிலும் இது போன்ற பிரச்சனைகள் பெண்களிடையே அதிகமாகவே காணப்படுகிறது. சில நேரங்களில் மூட்டு வலி காரணமாக நாம் வீட்டின் படிக்கட்டில் அடிக்கடி ஏறி இறங்க முடியாமல் தவிக்கின்றோம். அத்தகைய சூழ்நிலையில், இந்த பிரச்சனையில் இருந்து விடுப்பட நீங்கள் சில பயிற்சிகளை செய்தால் போகட்டும், இதன் மூலம் நீங்கள் கால் மூட்டு மற்றும் கை மூட்டுகளில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இந்த பயிற்சிகள் எவை என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முழங்கால் வலியை எவ்வாறு குணப்படுத்துவது?


* உங்கள் முழங்கால்களில் தொடர்ந்து வலி இருந்துக் கொண்டே இருந்தால், குந்துதல் உடற்பயிற்சியை (SQUAT EXERCISE) செய்யுங்கள். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் முழங்கால் தசைகள் மற்றும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்குவதுடன் இரத்த ஓட்டமும் அதிகரித்து மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


மேலும் படிக்க | இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி


* Chair Dips உடற்பயிற்சி என்பது எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். இது ஃப்ளெக்சிபிலிட்டியை அதிகரிப்பதுடன் உங்கள் முழங்கால்களில் இருக்கும் வலியையும் குறைக்க உதவுகிறது. ஆனால் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த உடற்பயிற்சியை செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


* முழங்கால் வலியைக் குறைக்க ஸ்டெப் உடற்பயிற்சியும் சரியான தேர்வாகும். இந்தப் பயிற்சியை நாம் செய்யும்போது, ​​முழங்கால்கள் விரிவடையும், இதன் காரணமாக தசைகள் ஃப்ளெக்சிபிலிட்டியாக மாறும், மேலும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


* முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெறவேண்டுமானால் நீங்கள் தொடர்ந்து ஜாகிங் அல்லது நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பயிற்சிகள் உங்கள் முழங்கால்களை மட்டுமல்ல, உங்கள் முழு உடலையும் ஆக்டிவேட் செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் அவசியமான பயிற்சி ஆகும்.


மூட்டு வலிக்கு வீட்டு வைத்தியம்:


* முழங்கால் வலி ஏற்படும் போது ஆப்பிள் சைடர் வினிகரை மூட்டுகளில் தடவி வந்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். 


* மூட்டு வலி அடிக்கடி ஏற்பட்டால் இஞ்சியை எடுத்து தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து பின்னர் அதை வடி கட்டிய தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் மூட்டுகளில் உள்ள வீக்கம் குறையும்.


* கடுகு எண்ணெயை சூடாக்கி வலி இருக்கும் இடத்தில் மசாஜ் செய்தால் வலி குறையும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.


* மூட்டுகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்க கற்பூர எண்ணெயை பயன்படுத்தலாம். இதற்கு இரண்டு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சூடேற்றி, அதில் கற்பூர கட்டியை சேர்த்து மூட்டுகளில் மசாஜ் செய்யலாம்.


 


* மஞ்சளில் இருக்கும் குர்குமின் மைக்ரோபீயாவுக்கு எதிரான குணம் கொண்டது. இதனால் தண்ணீரில் மஞ்சள் தூளை போட்டு பேஸ்ட் செய்து மூட்டுகளில் தேய்த்தால் வலி நிவாரணம் கிடைக்கும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை வேகமா குறைக்கும் பப்பாளி.. இன்னும் பல நன்மைகளும் இதில் இருக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ