முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆதார் அட்டையைப் புதுப்பிக்கும் நோக்கத்திற்காக மக்கள் தங்கள் அடையாள அல்லது முகவரி சான்று ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரித்துள்ளது. தனிநபர்கள் தங்களுடைய ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு ஆதார் ஆணையம் ஒருபோதும் கேட்பதில்லை என்றும், இதுபோன்ற கோரிக்கைகள் மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் ஆதார் ஆணையம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

UIDAI முக்கிய ஆவணங்களைப் பகிர ஒருபோதும் கேட்காது


"உங்கள் ஆதாரை மின்னஞ்சல் அல்லது Whatsapp மூலம் புதுப்பிக்க உங்கள் proof of identity and address ஆவணங்களைப் பகிருமாறு UIDAI ஒருபோதும் கேட்காது. உங்கள் ஆதாரை ஆன்லைனில் #myAadhaarPortal மூலம் புதுப்பிக்கவும் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் மையங்களுக்குச் செல்லவும்."


மேலும் படிக்க | பெண்களுக்கான அசத்தல் திட்டம்! தினமும் ரூ. 87 முதலீட்டில் ரூ.11 லட்சத்தை பெறலாம்!


இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) உங்கள் ஆதாரைப் புதுப்பிக்க, உங்கள் அடையாளச் சான்று (பிஓஐ) அல்லது முகவரிச் சான்று (பிஓஏ) ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிரும்படி கேட்கவில்லை. UIDAI-ன் இணையதளம், myAadhaarPortal அல்லது உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று உங்கள் ஆதாரை ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.


கடந்த ஆண்டின் தொடக்கத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Meity) கீழ் இயங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளின் நகல்களை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியது. ஏனென்றால், ஆதார் அட்டையில் தவறாகப் பயன்படுத்தக்கூடிய முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் உள்ளன. அதற்கு பதிலாக, மக்கள் மாஸ்க் ஆதாரை பயன்படுத்தலாம், இது அவர்களின் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காட்டுகிறது.


இந்த ஆதார் அட்டையை தான் அடையாளத்தை நிரூபிக்கவும், பரிவர்த்தனை செய்யவும் இலவசமாகப் பயன்படுத்த வேண்டும். ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற பொதுத் தளங்களில் வைக்கக் கூடாது. மக்கள் தங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு விவரங்களையோ அல்லது காசோலையையோ (வங்கி கணக்கு எண் உள்ளதை) வாங்கும்போது கொடுக்கிறார்கள். பள்ளிக் கட்டணம், தண்ணீர், மின்சாரம், தொலைபேசி மற்றும் இதர பயன்பாடுகளுக்காக இந்த ஆதாரை பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டைகளைப் பெற்று, தங்கள் விவரங்களைப் புதுப்பிக்காதவர்களை விரைவில் அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை, அரசு சேவைகளை எளிதாக அணுகுதல், வங்கிக் கணக்குகள் மற்றும் பயணம் ஆகியவற்றை எளிதாக்குவதன் மூலம் வாழ்க்கையை எளிதாக்க உதவும் என்று UIDAI கூறுகிறது.


மேலும் படிக்க | மாதம் ரூ.210 முதலீடு செய்தால் போதும், ரூ.60,000 ஓய்வூதியம் பெறலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ