உலகில் பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். அதேபோல் சைவ உண்பவர்களும் அதிகளவு இருக்கிறார்கள். உணவை பொறுத்தவரை அசைவம், சைவம் என அனைத்து வகையுமே நல்லதுதான் என்றாலும் சைவ உணவு சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும் என்ற கூற்றும் அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சூழலில், சைவ உணவுகளைச் சாப்பிடுவோரின் எலும்பு ஆரோக்கியம் சற்று கவலைத்தரும்படியாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது. 26,000-க்கும் மேற்பட்ட நடுத்தர வயது பெண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அசைவம் சாப்பிடுபவர்களை விடச் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் என்பது தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நடத்திய ஆய்வு BMC மருத்துவ இதழில் வெளியானது. இந்த ஆய்வு வழக்கமாக அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மத்தியில் எப்போதாவது இறைச்சி உண்பவர்கள், இறைச்சி சாப்பிடாமல் மீன் மட்டும் சாப்பிடுபவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் உள்ளிட்டோருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை ஆய்வு செய்தது. அதில் இந்த முடிவானது வெளிவந்துள்ளது.



இந்த ஆராய்ச்சியில் 20 வயதுக்கு மேற்பட்ட சுமார் 26,318 பெண்களின் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில்சுமார் 822 இடுப்பு எலும்பு முறிவு பாதிப்புகள் கண்டறியப்பட்டன.


புகைபிடித்தல் மற்றும் வயது போன்ற காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இடுப்பு எலும்பு முறிவுகளில் அதிகளவு இருந்தனர். 


மேலும் படிக்க | குழந்தைகளுக்கான இதய ஆரோக்கியம் கேள்விக்குறியே... ஆய்வில் அதிர்ச்சி தகவல்


தொடர்ந்து இறைச்சி உண்பவர்களுடன் ஒப்பிடுகையில், சைவ உணவைப் பின்பற்றும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33% அதிகமாக இருப்பதைக் கண்டதாக ஆய்வின் ஆசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளனர். அதே போல வாரத்திற்கு 5 முறைக்கும் குறைவாக இறைச்சி உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஆபத்து அதிகம் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Hemochromatosis: அளவிற்கு அதிகமான இரும்பு சத்து உயிருக்கு எமனாகலாம்; எச்சரிக்கும் நிபுணர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ