டிஜிட்டல் பண பரிவர்த்தனை இந்தியாவில் உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. அதிக கட்டணம் ஏதும் இல்லாமல் மொபைல் மூலம் யாருக்கும் எளிதாக பணம் செலுத்தலாம். பண பரிவர்த்தனை தவிர பெரும்பாலானோர் ஆன்லைன் மூலமாகவே நேரடியாக வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை மாற்றுகிறார்கள். ஆனால் UPI மூலம் பணம் செலுத்துவது தொடர்பான வரம்பு என்ன என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது. HDFC, SBI மற்றும் ICICI உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் UPI மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பை நிர்ணயித்துள்ளன. இவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுபிஐ பரிவர்த்தனை வரம்பு என்பது வங்கியைப் பொறுத்து மாறுபடும். பல்வேறு அளவிலான வரம்புகளை HDFC, ICICI மற்றும் பிற வங்கிகள் அமைத்துள்ளன. இந்த வரம்பை மீறி பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது.


UPI என்றால் என்ன?


வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் UPI ஆகும். அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (Unified Payments Interface). நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இது குறித்து கூறுகையில், யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது ஒரு மொபைல் ஆப் மூலம் உங்கள் பல வங்கிக் கணக்குகளை எளிதாக இணைக்கும் அமைப்பாகும். இதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் எஎன்றாலும், அவரது எண்ணை உள்ளிட்டு உங்கள் UPI பின்னை உள்ளிட்டு எளிதாக பணம் அனுப்பலாம்.


மேலும் படிக்க | வருமான வரி தாக்கல் செய்யும் போது ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!


NPCI வெளியிட்டுள்ள தகவலில், UPI மூலம், எந்தவொரு நபரும் ஒரு நாளில் தனது கணக்கிலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் அனுப்ப முடியும். இருப்பினும், இந்த வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும். நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளின் UPI வரம்புகளின் முழுமையான பட்டியலை Google Pay வெளியிட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்வோம்.


Google Pay இல் வங்கிகளின் UPI கட்டண வரம்பு:


State Bank of India (SBI) வங்கி கணக்கில் ஒரு நாளைக்கு UPI மூலம் நாம் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை நாம் பரிமாற்றம் செய்யலாம்.


HDFC வங்கியில் UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த வரம்பு ஐந்தாயிரம் ரூபாய்.


ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வரை UPI பரிவர்த்தனைகளைச் செய்யலாம், ஆனால் Google Pay பயனர்களுக்கு இந்த வரம்பு ரூ.25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஆக்சிஸ் வங்கி UPI பரிவர்த்தனை வரம்பை ரூ.1 லட்சமாக வரையறுத்துள்ளது.


பாங்க் ஆஃப் பரோடா மூலம் UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், அமேசான் பே, UPI வழியாக ரூ.1,000,000 அதிகபட்ச பணப் பரிமாற்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், Amazon Pay UPI க்கு பதிவு செய்த முதல் 24 மணிநேரத்தில் பயனர்கள் INR 5,000 வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். வங்கியைப் பொறுத்து, ஒரு நாளைக்கு 20 பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பண பரிவர்த்தனை விதிகள்... கவனமாக இல்லை என்றால் IT நோட்டீஸ் வரும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ