வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் வட சென்னை. சில வருடங்களுக்கு முன் வட சென்னை படத்தைத் தொடங்கினர். வட சென்னை படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ரிலீஸ்க்கான போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட சென்னை படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ரிலீஸ்க்கான போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் வடசென்னை முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியானது. தற்போது நடந்துவரும் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை முடித்து படத்தை ரம்ஜான் விடுமுறைக்காக வெளியிட தனுஷ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.


'வடசென்னை' படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வடசென்னை படம் சென்னையில் மீனவர்கள், மற்றும் அந்த சுற்றுச் வட்டார மக்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல் தான் கதை என தெரியவந்துள்ளது.


இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனுஷ்-ன் வட சென்னை படத்த்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.