வந்தாச்சு தைப்-பொங்கல்: வாங்க கொண்டாடலாம்!!
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாகும்.
தை மாதம் முதல் நாள் அன்று ஆண்டு முழுவதும் அதிகமான மழை பொழியவும், தானியங்கள் நன்கு விளையவும் தெய்வங்களை வணங்கும் பண்டிகை பொங்கல் திருநாளாகும்.
பொங்கல் எனும் அறுவடை திருநாளாம் மக்களுக்கு வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இயற்கை அளிக்கும் கொடைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக தை மாதத்தின் முதல் நாள் அமைகிறது.
உலக மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களை போற்றிடும் திருநாளாகவும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த திருநாளில், வீட்டின் நடு கூடத்தில் புதுப்பானை வைத்து புது நெல் அரிசி, புது வெல்லம், நெய் இவைகளைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான தெய்வங்களுக்கு படையல் வைத்து வணங்க வேண்டும்.
தமிழகம் மட்டுமின்றி தமிழர் வாழும் நாடுகளான , இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு போன்ற அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது
மாதப் பிறப்பான தை மாதமே, பொங்கலாக கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பு இந்த முறை, நாளைய தினம் 14.1.18 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலையில்தான் பிறக்கிறது. ஆகவே நாளை மாலை 4 மணிக்கு பொங்கல் வைக்க உகந்த நேரம் என்று வைத்தியர் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்குப் பிறகும் வைக்கலாம். ஆனால், 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம் என்பதால், மாலை 4 மணிக்கு பொங்கல் வைப்பதே சிறப்பானது என்று தெரிவிக்கிறார்கள்.