Vastu Tips: வீண் செலவை குறைத்து, பண வரவை அதிகரிக்கணுமா? இந்த செடிதான் தீர்வு
Vastu Shastra: உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றக்கூடிய ஒரு செடியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பணம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு விஷயமாகும். மனிதர்கள் அனைவரும் பணக்காரர்களாக ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் பணக்காரர் ஆக, கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்துடன், புத்திசாலித்தனத்திற்கு முக்கிய பங்கு உண்டு. மரங்கள் மற்றும் தாவரங்களை வழிபடுவது பற்றி வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, சில சிறப்பு மரங்கள் மற்றும் தாவரங்கள் பற்றி வேத ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் நடுவதன் மூலம் அதிர்ஷ்டத்தை மாற்றலாம். உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றக்கூடிய அத்தகைய ஒரு செடியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் பணம் சேரும்
அன்னை சரஸ்வதியின் அருளில்லாமல் வீட்டில் அன்னை லட்சுமியின் வருகை சாத்தியமில்லை என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் நம்புகிறார்கள். புத்திசாலித்தனத்தால் மட்டுமே ஒருவன் பணக்காரனாகிறான். இந்த தாவரம் அறிவுத்திறனை வழங்குகிறது. இந்த செடியின் பெயர் மயூர்பங்கி, அதாவது மயில் இறகு ஆகும். இது கல்வியின் தாவரம், வித்யா செடி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த செடியை வீட்டில் நடுவதால் பணம் வந்து கொண்டே இருக்கும். இந்த செடி நடப்பட்ட இடத்தில், பணம் ஈர்க்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. பணக்காரர்கள் இந்த செடியை வீட்டில் நட்டு தங்கள் வீட்டில் எப்போதும் பண வரவு இருப்பதை உறுதி செய்துகொள்கிறார்கள்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தைகள் அறிவு கூர்மையுடன் இருக்க சில எளிய வாஸ்து குறிப்புகள்!
மயில் இறகு செடியை எந்த திசையில் நட வேண்டும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த செடியை வடக்கு திசையில் நட வேண்டும். இந்த திசை நுண்ணறிவு திசை என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் இந்த செடியை ஒரு தொட்டியில் நடும் எண்ணத்தில் இருந்தால், வடக்கு திசையியையே பயன்படுத்துவது நல்லது. இப்படிச் செய்வதன் மூலம் படிப்படியாக நிதி நிலைமை மேம்படும். அதே சமயம் ஊதாரித்தனத்தையும் இது போக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Vastu Alert: சமையலறையில் இவையெல்லாம் இருக்கவே கூடாது, ஜாக்கிரதை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR