Vastu Alert: சமையலறையில் இவையெல்லாம் இருக்கவே கூடாது, ஜாக்கிரதை!!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, சில விஷயங்களை கவனிக்கவில்லை என்றால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கத் தொடங்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2022, 06:50 PM IST
  • பல சமயங்களில் சமையலறை சம்பந்தமான பல விஷயங்களை அலட்சியம் செய்கிறோம்.
  • வாஸ்து சாஸ்திரப்படி சமையல் அறையில் மருந்துகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
  • சமையலறையில் கண்ணாடியை பயன்படுத்தக்கூடாது.
Vastu Alert: சமையலறையில் இவையெல்லாம் இருக்கவே கூடாது, ஜாக்கிரதை!!  title=

Kitchen Vastu: புராணங்களில் சமையலறைக்கு மிக முக்கிய இடம் உண்டு. நாம் சாப்பிடும் உணவின் தாக்கம் நம் மனதிலும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு நபர் எந்த வகையான உணவை உண்ணுகிறாரோ, அதே போல் அவரது மனமும், சிந்திக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் திறனும் மாறுகிறது. தாய் அன்னபூரணி சமையலறையில் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே, சமையலறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். 

பல சமயங்களில் சமையலறை சம்பந்தமான பல விஷயங்களை அலட்சியம் செய்கிறோம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சில விஷயங்களை கவனிக்கவில்லை என்றால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் தாக்கம் குடும்பம் முழுவதிலும் காணப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் (Vastu Shastra) படி, சில பொருட்களை சமையலறையில் வைப்பது வீட்டில் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் தாய் அன்னபூரணியும் கோபப்படுகிறார். ஆகையால், தாய் அன்னபூரணியை மகிழ்விக்க, எந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என இந்த பதிவில் காணலாம். 

சமையலறைக்கான வாஸ்து குறிப்புகள்

1. மருந்துகள்

பெண்கள் பெரும்பாலான நேரத்தை சமையலறையில் (Kitchen https://zeenews.india.com/tamil/health/top-tips-for-a-clean-kitchen-here...) செலவிடுவதால், சமையலறையிலேயே சிலவற்றை வைத்து விடுகிறார்கள். சில பெண்கள் தீக்காயத்துக்கான மருந்துகள் உட்பட சில மருந்துகளை சமையலறையிலேயே வைத்திருப்பார்கள். தீக்காயம் ஏற்பட்டாலோ, சூடான பாத்திரங்களில் சுட்டுக்கொண்டாலோ, உடனே மருந்து தடவ இப்படி செய்கிறார்கள். 

ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி சமையல் அறையில் மருந்துகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இப்படி செய்தால் வீட்டில் உள்ளவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் இது உங்கள் செலவுகளை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகமாக்கலாம்.

2. கண்ணாடி

மாறிவரும் காலத்திற்கேற்ப வீட்டின் உட்புறத்திலும் மாற்றங்களை செய்து வருகிறோம். வீட்டை அழகாக்க, சில சமயங்களில் சமையலறையில் கண்ணாடியை வைப்பார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் கண்ணாடி பயன்படுத்தக்கூடாது. 

சமையலறையில் உள்ள அடுப்பு அக்னி பகவானின் குறிகாட்டியாகும். மேலும் கண்ணாடியில் நெருப்பின் பிரதிபலிப்பு இருந்தால், அது வீட்டில் அழிவை ஏற்படுத்தும். இப்படி செய்தால், வீட்டில் முரண்பாடுகள் இருக்கும். அதுமட்டுமின்றி, வீட்டின் நிதி நிலைமையும் மோசமாகும்.

ALSO READ | Vastu Shastra: சமையலறையில் இவை மட்டும் தீரவே கூடாது, தீர்ந்தால் தீராது பிரச்சனைகள் 

3. கோதுமை மாவு

இரவில் சப்பாத்தி செய்யும் போது, பிசைந்த மாவு மீந்துவிட்டால், அதை மீண்டும் காலையில் சப்பாத்தி செய்ய பயன்படுத்துகிறோம். ஆனால் இப்படி செய்வது சரியானது அல்ல. வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீண்ட நேரம் வைக்கப்படும் பிசையப்பட்ட மாவில் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் உருகாகி, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இதன் காரணமாக, வீட்டில் சனி மற்றும் ராகுவின் எதிர்மறையான விளைவும் ஏற்படும். இது பல சிக்கல்களை உருவாக்கும். 

4. பயனற்ற பாத்திரங்கள்

பெரும்பாலும் உடைந்த மற்றும் நசுங்கிய சில பாத்திரங்களை பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது வாஸ்து சாஸ்திரத்தின் படி நல்லதல்ல. இப்படிச் செய்வதால் வீட்டின் நிதி நிலை மோசமாகிவிடும். மேலும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

5. சமையலறையை ஸ்டோர் ரூம் ஆக்காதீர்கள்

சிலர் பயன்படுத்தாத பொருட்களை சமையலறையில் வைத்திருப்பார்கள். வாஸ்து (Vastu) சாஸ்திரத்தில் இது சரியென்று கருதப்படுவதில்லை. சமையலறையில் குப்பை கூளம், அடைச்சல்கள் ஆகியவற்றை வைத்திருப்பதால், தாய் அன்னபூரணிக்கு கோபம் வருவதாக சொல்லப்படுகின்றது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜீ மீடியா இவற்றை அங்கீகரிக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.)

ALSO READ | Kitchen Vastu: சப்பாத்தி செய்ய கூட சாஸ்திரம் இருக்கா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News