உங்கள் குழந்தைகள் அறிவு கூர்மையுடன் இருக்க சில எளிய வாஸ்து குறிப்புகள்!

இன்றைய போட்டி நிறைந்த காலகட்டத்தில், மாணவர்கள் கல்வியில் மிக சிறந்து விளங்க வேண்டிய அவசியம் உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2022, 09:10 PM IST
உங்கள் குழந்தைகள் அறிவு கூர்மையுடன் இருக்க சில எளிய வாஸ்து குறிப்புகள்!

இன்றைய போட்டி நிறைந்த காலகட்டத்தில், மாணவர்கள் கல்வியில் மிக சிறந்து விளங்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் சில சமயங்களில் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மிகவும் விளையாட்டாக இருப்பார்கள். இதன் காரணமாக பெற்றோர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

மாணவர்கள்  படிப்பில் கவனம் செலுத்தவும் , அறிவில் சிறந்து விளங்கவும் சில எளிய வாஸ்து பரிகாரங்கள் உள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, படிப்பில் கவனம் செலுத்த படிக்கும் இடம் அல்லது படிப்பு அறையை சரியாக அமைப்பது மிகவும் முக்கியம். படிக்கும் இடத்தில் அல்லது அறையில் சில விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

1.  மாணவர்கள் படிக்கும் போது உத்திரத்தின கீழ் அமர்ந்து படிக்கக்கூடாது. அப்படி படிப்பதால், படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே, படிக்கும் அறையில் உத்திரம் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி உத்திரம் இருந்தால், அங்கே ஒரு புல்லாங்குழலைத் தொங்க விடலாம். இது அந்த இடத்தின் வாஸ்து தோஷத்தின் பாதிப்பை குறைக்கும்.

மேலும் படிக்க | Vastu Shastra: சமையலறையில் இவை மட்டும் தீரவே கூடாது, தீர்ந்தால் தீராது பிரச்சனைகள் 

2.குழந்தைகளின் படிப்பு அறை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். மேலும், கிழக்கு அல்லது வடக்கு  திசையில் புத்தகங்களை வைக்கவும்.

3. ஞானத்தின் கடவுளான விநாயகர் அல்லது  கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை குழந்தைகளின் படிக்கும் அறையில் வைக்கலாம்.

4. படிக்கும் போது, ​​மாணவர்கள் எப்போதும் தெற்கு திசையை நோக்கி அமர்ந்து படிக்கக்கூடாது.  இது கவனசிதறலுக்கு வழிவகுக்கிறது.

5. குழந்தைகள் படிக்கும் மேசையில் ஒரு பூகோளம் அல்லது செப்பு பிரமிடு ஆகியவற்றை வைப்பது நல்லது. இது குழந்தை படிப்பில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | Kitchen Vastu: சப்பாத்தி செய்ய கூட சாஸ்திரம் இருக்கா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News