வேத ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்திற்கும் சில சிறப்பு பண்புகள் உள்ளன. அவை அவற்றின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகின்றன. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, அது அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 31 அன்று, மகிழ்ச்சியையும், சிறப்பையும் தரும் சுக்கிரன் கிரகம், தனது நட்பு கிரகமான சனி பகவானின் ராசியான கும்பத்திற்கு பெயர்ச்சியாகப் போகிறது. கும்ப ராசி-யில் சுக்கிரனின் மாற்றங்கள் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், மூன்று ராசிக்காரர்கள் சிறப்புப் பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. அந்த மூன்று ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.


மேஷம்:
மார்ச் 31-ம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு மாறுவது மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம் போன்றதாகும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நடக்கப் போகிறது. 


ஜாதகத்தின் 11வது ஸ்தானம் லாபம் மற்றும் வருமானத்திற்கான ஸ்தானமாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்குப் பண வரவுக்கான யோகம் உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், நிதி நிலையில் மாற்றமும் ஏற்படும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.


மேலும் படிக்க | புதனின் அருளால் இந்த 6 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது 


ரிஷபம்:


சனியின் ராசியான கும்பத்தில் சுக்கிரன் மாறப் போகிறார். இது பத்தாம் வீட்டில் நடக்கப்போகிறது. இந்த ராசி மாற்றம் ரிஷப ராசியினருக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கும். ஜாதகத்தின் பத்தாம் வீடு வேலை மற்றும் தொழில் சார்ந்தது. இந்த காலத்தில் நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலை வாய்ப்புகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வும் மேலதிகாரியின் பாராட்டும் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். சென்ற இடங்களிலெல்லாம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மரியாதை கிடைக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.


கும்பம்


சுக்கிரனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்கார்ரகளுக்கு நல்ல பலன்களைத் தரும். பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். திடீர் பண பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும்.


மேலும் படிக்க | இந்த மாதம் உதயமாகிறார் குரு பகவான்: இந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் உண்டாகும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR