புதுடெல்லி: இந்த வைரல் வீடியோவை பார்க்கும் யாரும் இனிமேல் ‘வாத்து’ என்று பாக்கியராஜ் பாணியில் யாரையும் திட்ட மாட்டார்கள்.  இந்த வாத்து உடற்தகுதி பற்றி மிகவும் அறிந்திருக்கிறது, வாத்தின் உடற்பயிற்சி வீடியோ மக்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதற்கு காரணம் ஏதும் தேவையில்லை. அண்மையில்  வாத்து  வீடியோ ஒன்று வைரலாகி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்டது, அதாவது ஞாயிற்றுக்கிழமை, இந்த வாத்து சாதாரண மனிதர்களைப் போல அன்று ஆசுவாசமாக உடற்பயிற்சி செய்கிறது போலும்!  



உடற்பயிற்சி பற்றி வாத்துக்குத் தெரியுமா?  
இந்த வீடியோவில் ஒரு வாத்து காணப்படுகிறது, அவர் தனது உடற்தகுதி பற்றி நன்கு அறிந்தது போல சூப்பராக டிரெட் மில்லில் வாக்கிங் செய்வது போல் நடக்கிறது. வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு அதியமாக இருக்கும்.  ஒரு வாத்து ஒரு தானியங்கி இயந்திரத்தின் முன் நிற்கிறது. பின்னர் உடற்பயிற்சி செய்பவர்களைப் போல இயல்பாகவே அதில் ஏறுகிறது. இயந்திரம் இயங்கத் தொடங்கியவுடன், வாத்து நடக்க ஆரம்பிக்கிறது.  ஆனால் பின்நோக்கி நகர்கிறது.  இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது.


இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுஷாந்த் நந்தா சமூக ஊடகங்களில் (Social Media) பகிர்ந்துள்ளார். Sunday Mood என்ற தலைப்பில், சுஷாந்த் நந்தா பகிர்ந்த இந்த வீடியோவை இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவில் சிலர் வேடிக்கையான கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களில், அவர்கள் அந்த வாத்தின் மனநிலையுடன் உடன்படுகிறார்கள். Moonwalker என்றும் சிலர் இந்த உடற்தகுதியை வளர்க்கும் வாத்துக்கு பெயரிட்டுள்ளனர்.  



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR