ஐக்கிய அரபு அமீரகம், உலகின் மிக நீளமான ஜிப் வரிசையைத் அறிமுகப்படுத்தி புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இதன் நீளம் 2.83 கிலோமீட்டர் என அளவிடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உலக சாதனைக்கான சான்றிதழினை கின்னஸ் உலக பதிவுகள் அதிகாரி ராஸ் அல் கைமாவில் அளித்தனர், அதே நாள் முதல் இந்த ஜிப் வரிசையானது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,680 மீட்டர் உயரத்தில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய மலை உச்சியில் இந்த அமைப்பானது நிறுவப்பட்டுள்ளது. த்ரில்லர் பயணத்தினை விரும்புவோருக்கும கிட்டத்தட்ட மூன்று நிமிட த்ரில்லர் அணுபவத்தை அளிக்க இந்த அட்டகாசமான அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.


அபுதாபி மற்றும் துபாய் போன்ற அண்டை எமிரேட்ஸில் இருந்து சுற்றுலா வரும்  பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்த ஜிப் வரிசை அமைந்துள்ளது.