திடீரென எகிறும் சுகர் லெவலை குறைகக் உதவும் இயற்கையான வழிமுறைகள்

Diabetes Control Tips: உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில இயற்கையான வழிகள் நமக்கு உதவும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2024, 11:35 AM IST
  • அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்.
  • குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகள்.
  • குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள்.
திடீரென எகிறும் சுகர் லெவலை குறைகக் உதவும் இயற்கையான வழிமுறைகள் title=

Diabetes Control Tips: உலக மக்களை பாடாய் படுத்தி வரும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முதலிடத்தில் உள்ளது. ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மை. எனினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை கொண்டு இதை கட்டுக்குள் வைக்கலாம். 

Blood Sugar Level

சாப்பிட்ட இரண்டு மணி நேரம் ஆன பிறகு இரத்த சர்க்கரை அளவு 200 mg/dl ஆக இருந்தால், அது  நீரிழிவு நோயைக் குறிப்பதாக மயோ கிளினிக் கூறுகிறது. குளுக்கோஸின் இந்த அளவு கவலை அளிக்கும் அளவாக கருதப்படுகின்றது. மருத்துவர் பரிந்துரைத்துள்ள மருந்துகளை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ள மறந்தாலோ, அல்லது அதிகப்படியான உணவு உட்கொண்டாலோ இது நிகழ்கிறது. சர்க்கரை அளவு 200 mg/dl ஐ எட்டினால், அதைக் கட்டுப்படுத்த சில இயற்கையான வழிகள் நமக்கு உதவும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

வழக்கமான உடற்பயிற்சி

ஆரோக்கியமான எடையை பராமரிப்பதுடன், தினமும் உடற்பயிற்சி (Exercise) செய்வது இன்சுலின் சென்சிடிவிடியை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை இயற்கையாக நீக்க உதவும்... சில பழக்கங்கள்

குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள்

கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால், உடலில் இன்சுலின் செயல்பாடு மோசமடையத் தொடங்குகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஆகையால், கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைப்பது (Low Carbohydrates) நீரிழிவு நோயாளிகளுக்கு மிக அவசியமாகும்.

அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்

கரையக்கூடிய நார்ச்சத்து (Fiber) அதிகமாக உள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகின்றன. ஆகையால், தினமும் உணவில் அதிக அளவு காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நீரேற்றமாக இருப்பது அவசியம்

தினமும் போதுமான அளவு தண்ணீர் (Water) குடிப்பது சுகர் நோயாளிகளுக்கு மிக அவசியம். இதன் மூலம் உடலின் சர்க்கரை அளவு அதன் இயல்பான வரம்பில் இருக்கும். ஏனெனில் இது சிறுநீரகங்கள் அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகள்

பார்லி, ஓட்ஸ், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளை (Low Glycemic Index Foods) சாப்பிடுவது சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இவை எடை இழப்பிலும் உதவுகின்றன. இவை கலோரிகளை அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மலச்சிக்கல் பாடாய்படுகிறதா? வயிற்றை சுத்தம் செய்ய எளிமையான டிப்ஸ்....!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News