மழையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நமக்கு வீடு இருக்கிறது. ஆனால், முதலைகள் என்ன செய்யும் பாவம். மழையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய முதலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குஜராத்தின் வதோத்ரா மாவட்டத்தில் மழை காலத்தில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு.



குஜரத்தில் வதோத்ரா மாவட்டத்தில் உள்ள மஞ்சல்பூரில் உள்ள குடியிருப்பு பகுதியில்இருந்து 8 அடி நீள முதலையை குஜராத்தின் மிருக வதை தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் மீட்டனர்.


மழை அதிகம் பெய்யும் போது, அடிக்கடி காட்டுபகுதியில் இருந்து முதலைகள் வரும் என அங்கு இருப்பவர்கள் கூறுகின்றனர். இதில் பிரச்சனை என்னவென்றால், மழை பெய்து நீர் தேங்கியிருக்கும் போது, முதலைகள் இருப்பது தெரிவதில்லை.ஆனால், மழை நீர் வடிந்தவுடன் தான் அது இருப்பது தெரிய வருகிறது. மக்கல் அதனால், அச்சத்துடன் இருக்கின்றனர்.


வனவிலங்குகள் மழைகாலத்தில் அடிக்கடி அங்கே வரும் என்று வனத்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.


ஒவ்வொரு மழை காலத்திலும், இவ்வாறு வரும் முதலையை
அதனை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் சேர்க்கும் பணியை தாங்கள் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதற்கான அவர்கள் ஹெல்ப் லைன் எண்ணை வைத்துள்ளனர். விடுமுறை ஏதும் இன்றி இவர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



முதலை ஆளையே அடித்துக் கொல்லும் வல்லமை பெற்றது என்பதால் அதை பிடிக்கும்போது அதற்கான சாதனங்களை பயன்படுத்தி  அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்


எப்படியோ, முதலை யாரையும் தாக்காமல், பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள் அதனை மீட்டனர்.


ஜூலை மாதம், வதோதராவில் உள்ள கலன்பூர் கிராமத்தின் வயல்களில் இருந்து 7 அடி நீளமுள்ள முதலை மீட்கப்பட்டது. தன்னை பிடிக்க வந்தவரை தாக்க முயற்சித்தது. இருப்பினும், அதனிடம் இருந்து தப்பித்து, அதிகாரிகள் அதனை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் இந்த முதலை மறுவாழ்வுக்காக மாநில வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


கடந்த மாதம், மத்திய பிரதேசத்தில் ஒரு நெடுஞ்சாலையில் 10 அடி நீளமுள்ள முதலை சாதாரணமாக 'வாக்கிங் போனது'.  மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள ரன்னோத் கிராமத்தில் நெடுஞ்சாலையை கடக்கும் முதலை வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டது.


மேலும் படிக்க | Watch Video: நெடுஞ்சாலையில் வாக்கிங் போகும் முதலை…!!!