Thailand Updates Visa Rule: இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் கோவாவிற்கு அடுத்தபடியாக இருப்பது தாய்லாந்து தான். சமீபத்தில் தாய்லாந்து அரசு இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு விசா விலக்கு திட்டத்தை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, நவம்பர் 11, 2024 வரை இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்தை சுற்றி பார்க்கலாம். இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு விசா சம்பந்தமான தேவைகளை நீக்குவது அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்றும், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது. தாய்லாந்தில் பாங்காக் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்தாலும், அதையும் தாண்டி பல இடங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…


அயுத்யாய: வரலாற்று ஆர்வலர்களுக்கு அயுத்யாய ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு தலையில்லாத புத்தர் சிலைகள் மற்றும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கோயில் என பழங்கால தளங்களை நிறைய காண முடியும்.இங்குள்ள கோயில்கள் மற்றும் கட்டமைப்புகளை பார்த்தால் தாய்லாந்தின் வளமான வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். இதன் மூலம் தாய்லாந்தை பற்றிய கடந்த கால சுவாரஸ்ய நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


சியங் மாய்: வடக்கு தாய்லாந்தின் தலைநகரான சியாங் மாய் உள்ளது. இந்த பகுதி பழங்கால கோவில்கள், பரபரப்பான சந்தைகள் மற்றும் சுவையான உணவு வகைகளுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள இடங்களை தாண்டி சுற்றுலா பயணிகள் காவோ சோய் மற்றும் சாய் ஓவா போன்ற பாரம்பரிய தாய் உணவுகளை அனுபவிக்க முடியும். இவை தவிர, பசுமையான நிலப்பரப்புகள், மலையேறலாம், யானைகளை கிட்ட பார்ப்பது போன்றவற்றை அனுபவிக்க முடியும். இங்குள்ள இயற்கை அழகுகள் மற்றும் கோயில்கள் மூலம் சியாங் மாய் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது.


பெட்சபுரி: மத்திய தாய்லாந்தில் உள்ள பெட்சபுரி சாகசத்திற்கு பெயர் பெற்றது. இந்த பகுதிகளில் குரங்குகளால் பாதுகாக்கப்பட்ட குகைக்குள் அமைந்துள்ள காவ் லுவாங் குகைக் கோயில் உள்ளது. அங்கு பண்டைய அதிசயங்கள் நிறைய நிறைந்துள்ளன. மேலும் கோவிலை சுற்றி பசுமையான காடுகளும், மலைகளும் உள்ளன. பெட்சாபுரி இயற்கையின் வளங்களை அதிகம் கொண்டுள்ளது. 


கோ சமேட்: பாங்காக்கிலிருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள கோ சமேட் வெள்ளை மணல் மற்றும் தெளிவான நீரைக் கொண்ட சொர்க்க பூமி ஆகும். நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினாலும் அல்லது சாகசத்தை விரும்பினாலும் கோ சமேட் தீவு அனைத்தையும் வழங்குகிறது. கடலில் டைவ் செய்ய, கடற்கரையில் ஓய்வெடுக்க, ​புதிய கடல் உணவை அனுபவிக்க இந்த பகுதி பெயர் பெற்றது. 


காஞ்சனபுரி: பாங்காக்கிற்கு அருகில் ஒரு வரலாற்று கிராமம் காஞ்சனபுரி ஆகும். இது வரலாற்றையும் அழகையும் இணைக்கிறது. இந்த பகுதி இரண்டாம் உலக போரில் தொடர்புடைய ரயில்வே, பாலம், பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் குகைகளால் சூழப்பட்டுள்ளது. பாலத்தைக் கட்டிய போர்க் கைதிகளை கௌரவிக்க ஜீத் போர் அருங்காட்சியகத்தைப் பார்வையிடவும்.


மேலும் படிக்க | திருமண உறவை சிதைக்கும் இந்த 5 மிகப்பெரிய தவறுகள்... கவனமாக இருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ