நினைத்த விஷயங்கள் நடக்க வேண்டுமா? 5 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்
நினைத்த விஷயங்கள் உண்மையில் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?, அதனை யாரும் பழக்கப்படுத்துவதில்லை.
வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் எல்லாம் நடக்கும். நீங்கள் நேர்மறையாக நினைத்தால் நல்ல விஷயங்களும், எதிர்மறையாக நினைத்திருந்தால் கெட்ட விஷயங்களும் நடக்கும். காலம், நேரம் மாறலாம். ஆனால் உங்கள் மனதில் தோன்றாத விஷயங்கள் நடக்காது. உதாரணத்துக்கு, நீங்கள் பணக்காரராக வேண்டும் என நினைத்துக் கொள்கிறீர்கள் என்றால் உங்கள் சிந்தனை, உழைப்பு எல்லாம் அதனைச் சுற்றியே இருக்கும்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த பணம் உங்களை தேடி வரத் தொடங்கும். கூலி வேலைக்கு நல்ல சம்பளம் கிடைத்தால் போதும் என்று நினைத்தால் அதுவும் நடக்கும். நோய் வந்துவிடுவோமோ என்ற பயம் உங்களுக்குள் எழுந்தால் அதுவும் நடக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும். பிறப்பு இறப்பு இரண்டு மட்டும் தான் உங்கள் கையில் இல்லை. மற்றவை எல்லாம் நீங்கள் விரும்பும் விஷயங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது.
நல்ல சிந்தனை
கஷ்டம் உங்களை சுற்றிக் கொண்டிருக்கிறது என நினைத்தால், நீங்கள் கஷ்டத்தை விரும்புகிறீர்கள் என்றே அர்த்தம். சின்ன சின்ன விஷயங்களுக்கு வேதனைப்பட்டுக் கொண்டு, தெரிந்தோ தெரியாமலோ அதனை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பீர்கள். முதலில் அதனை நிறுத்துங்கள். எப்படி வாழ வேண்டும் என நினையுங்கள். தினமும் அதனை பற்றியே சிந்தியுங்கள். நீங்கள் அந்த விஷயத்தில் வெற்றி பெற முடியும் என நம்புங்கள். தினமும் அந்த நம்பிக்கை வளர்த்துக் கொண்டே இருக்கவும்.
மேலும் படிக்க | லைப் பார்ட்னர் உங்களுக்கு துரோகம் செய்கிறாரா...? கண்டுபிடிப்பது எப்படி?
எதிர்மறை சிந்தனை வேண்டாம்
எதிர்மறை சிந்தனைகள் எப்போதும் இருக்கவே கூடாது. என்னால் முடியாது, அவர் சொல்லிவிட்டார் அதனால் நிச்சயம் வெற்றி கிடைக்காது என மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு உங்களை நீங்கள் எதிர்மறை சிந்தனைக்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் அவர்கள் வெற்றி பெற முடியும் நினைத்தால் வெற்றி பெற்றார்கள். மற்றவர்கள் சொல்லி வெற்றி பெறவில்லை. எனவே, மற்றவர்கள் சொல்வதை கேட்டு நீங்கள் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். முதலில் உங்களைப் பற்றிய எதிர்மறை சிந்தனையை நிறுத்துங்கள்.
திட்டம்
எந்தவொரு விஷயத்தில் நீங்கள் வெற்றி பெற நினைத்தாலும் அதற்கான திட்டமிடல் அவசியம். என்ன தேவை, எவ்வளவு நாட்கள் வேண்டும், அதற்கான உங்களின் உழைப்பு என்ன, முதலீடு என்ன என தெளிவாக திட்டமிடுங்கள். எடுத்தமாத்திரத்தில் யாராலும் எந்த விஷயத்திலும் வெற்றி பெற முடியாது. நாள்தோறும் உங்களின் எதிர்கால வெறிக்காக உழைப்புகளை போட்டுக் கொண்டே வரவேண்டும். உழைப்பு தான் முதல் மூலதனம். அதனை தினமும் தவறாமல் செய்ய வேண்டும்.
நல்ல மனிதர்கள்
எப்போதும் நல்ல மனிதர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவது அவசியம். அப்போது தான் வெற்றி என்பது உங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும். ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள், பிறரை ஊக்குவிப்பர்கள் என அத்தகைய நபர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு வெற்றிக்கான வழியை கொடுக்காவிட்டாலும், அவர்களின் அணுகுமுறை நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனபதை கற்றுக் கொடுத்துவிடும்.
ஆரோக்கியம்
எந்த விஷயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் உங்களின் ஆரோக்கியம் முக்கியம். ஆரோக்கியத்தில் எப்போதும் தனி கவனம் செலுத்துங்கள். உணவு, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை தினமும் செய்ய போதுமான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். தினசரி இந்த விஷயத்தை தவறாமல் செய்து வாருங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை போல உடல் நன்றாக இருந்தால் நினைத்த விஷயங்களை எல்லாம் செய்ய முடியும். எனவே இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
மேலும் படிக்க | பெண்கள் இந்த வயதில் இதய பரிசோதனை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ