தங்கம் ஒரு உலோகம் என்றாலும், அதன் மதிப்பு உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதன் பலன்களும், நன்மைகளும் பற்றி தெரிந்தும் தெரியாமலும் அனைவரும் தங்கம் வாங்கி சேர்க்க விரும்புவது இயல்பானது தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் பாரம்பரியமாக இந்தியாவில் தங்க ஆபரணங்களுக்கு என ஒரு தனி விருப்பம் உண்டு. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தங்கம் வாங்குவார்கள் என்றாலும், ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம்.


இந்திய பாரம்பரிய முறையில், சாத்திரங்களின்படி, நவகிரக நாயகர்களில் குருவிற்கு பிடித்த உலோகம் தங்கம் ஆகும். குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து குரு பலம் பெற்றவர்களுக்கு தங்கம் சேர்ப்பது எளிது.


Also Read | பொன்னகைகளின் பொன்னான புகைப்படத் தொகுப்பு


செல்வம் மற்றும் பொன்னும் சேர்வதற்கான வாய்ப்புகளை ஒருவரின் ஜாதகத்தில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். குறிப்பாக சிலருக்கு தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் சிலருக்கு தங்கமே வீட்டில் தங்காது. பொன்னான இந்த மஞ்சள் உலோகத்தை வீட்டில் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுவாக நல்ல இடத்தில் அமைந்திருப்பது அவசியமானது. 


தங்கத்திற்கு உரிய தெய்வம் முருகர். பொன்னுக்கு அதிபதியான சக்தியின் மகன், மாலோன் மருகன் முருகனிடம் மனமுருகி வேண்டிக் கொண்டால் தங்கம் உங்களிடம் தங்கும். 


குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமையன்று விரதம் இருந்து குருபகவானுக்கு உரிய மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் . 
குருவின் பார்வை பட்டால், தங்கம் தட்டிப் போகாமல் உங்களிடமே தங்கிவிடும். சரி ஒருமுறை வந்த தங்கத்தை நம்மிடம் நிரந்தரமாக தக்க வைப்பதற்கும் சில பரிகாரங்கள் உள்ளன. 


Also Read | கதையல்ல நிஜம்! 37 நாட்களில் 4 திருமணம், 3 விவாகரத்து சாத்தியமே!!


தங்கத்திற்கு உரிய குரு மற்றும் முருகனின் கருணையை பெறுவதற்கு அவர்களின் காலடியில் சரணாகதி அடைய வேண்டும். பித்தளை சொம்பு ஒன்றில், அரிசி கொண்டைக்கடலை துவரம் பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து உள்ளே போட்டு ஒரு தேங்காயை எடுத்து அதன் மேல் வைத்து கும்பம் போல் அலங்கரித்து பூஜை அறையில் வைக்கவும்.


விரதம் இருந்து மனமுருக கடவுளை வேண்ட வேண்டும். விரதத்தை முடிப்பதற்கு முன்னதாக ஏதாவது ஒரு முருகன் ஆலயத்திற்கு சென்று வீட்டில் பூஜையில் வைத்த தானியங்களை தானமாக கொடுத்து விட வேண்டும். 


கொண்டை கடலையை கடவுளுக்கு நிவேதனம் செய்து, அதை பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.  இந்த விரதத்தால், தங்கத்தை ஈர்க்கும் ஆகர்ஷண சக்தி உங்களுக்கு வரும்.


Also Read | அன்னதானம் தெரியும், அது என்ன அன்ன தோஷம்? அது படுத்தும் பாடுகளும், பரிகாரமும்!


அதோடு, தங்கத்தை ஈர்க்கும் சக்தி மணத்திற்கு உண்டு. மனதிற்கு பொன்னாசை எப்போதும் இருக்கும் இது நறுமணங்கள். மனம் உகந்த நறுமணப்  பொருட்களை கொண்டும் பொன்னை வீட்டிற்கு ஈர்க்கலாம்.


துளசி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் என நறுமணம் கொண்ட பொருட்களை ஒரு செம்பு பாத்திரத்தில் போட்டு வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இதில் தங்கத்தை போட்டு வைக்கலாம். 


அமாவாசைக்கு மூன்று நாட்கள் கழித்து பெளர்ணமி வரும் வரை இந்த நறுமண தங்கத்தை பூஜையறையில் வைத்திருக்க வேண்டும். நறுமணம் அந்த இடம் முழுதும் பரவுமாறு இருக்க வேண்டும்.இந்த எளிய சுலபமான வழிமுறைகளை கடைபிடித்து தங்கத்திற்கு அதிபதியாக மாறாலாம்.


ALSO READ: சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR