பெரு நாட்டில் பாலத்தில் கிஸ் அடித்த போது கீழே விழுந்து பலியான வீடியோ காட்சி வைரலாக பரவும் வீடியோ!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். இந்நிலையில், பெரு நாட்டில் பாலத்தில் கிஸ் அடித்த போது கீழே விழுந்து பலியான வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.


பெரு நாட்டில்  34 வயதுடைய மேபெத் எஸ்பினாஸ் (Maybeth Espinoz), மற்றும் ஹெக்ட்டார் (Hector Vidal) ஆகிய இருவரும் காதல் ஜோடிகள், பெத்தலஹேம் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். பாலத்தில் செல்லும் போதே இடையில் ஒரு இடத்தில் நின்று தங்கள் காதலை பற்றி பேச துவங்கிவிட்டனர்.  


அப்பொழுது ஹெக்ட்டார் தனது காதலி மேபெத்தை பாலத்தின் தடுப்பு கம்பி மீது ஏறி அமர வைத்தார். இருவரும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்துக்கொண்டனர். அப்பொழுது காதலி தன் காதலனை தன் காலுக்குள் கொண்டு வந்து முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இருவரும் நிலைதடுமாறி எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். சுமார் 50 அடி உயர பாலம் என்பதால் காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன்றி அவரும் உயிரிழந்தார். 


இந்த விபரீத காட்சிகள் பாலத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.