இன்று மிகவும் முக்கியமான நாள். வளர்பிறை வெள்ளிக்கிழமையான இன்று செல்வவளம் பெற்று வளமுடன் வாழ வீட்டில் இதை செய்தால் போதும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்வ வளமும் மனநிம்மதியும் பெருக வேண்டுமா? வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் லட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று செய்யும் லட்சுமி பூஜைக்கு செல்வ வளத்தைப் பெருக்கி கொடுக்கும் ஆற்றல் உண்டு.


வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று எப்படி பூஜை செய்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பதை தெரிந்து அதை கடைபிடித்து வளமாக வாழவும்.


மேலும் படிக்க | செல்வ செழிப்புடன் திகழ, ராசிக்கு ஏற்ற எளிய வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்


மாலை 6 மணிக்கு இந்த பூஜையை செய்யலாம். முதலில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு லட்சுமி அன்னையின் படத்தை பூக்களால் அலங்காரம் செய்து, நெய் தீபம் ஏற்றவேண்டும். 


வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ உட்பட மங்கலப் பொருட்களுடன் பச்சை நிற வளையல்கள், பச்சை நிற வஸ்திரம் (ரவிக்கை துணி), 11 ரூபாய் காணிக்கை, மாதுளம்பழம்  என அனைத்துப் பொருட்களையும் அன்னையின் முன் வைக்கவும்.


நைவேத்தியத்திற்க்கு பால் பாயாசம் தயார் செய்து கொள்ளவும். பூஜையறையில் அமர்ந்து, லட்சுமியின் ஸ்தோத்திரங்களை சொல்லவும். 


‘மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும். இந்த பூஜையில் மனதை ஒரு நிலைப்படுத்தி, மனமுருக அன்னையிடம் வேண்டுதலை வையுங்கள்.


பிறகு, பாயாசத்தை நிவேதனம் செய்துவிட்டு தீபாராதனை காட்டி பூஜையை முடித்துக் கொள்ளவும். இந்த பூஜை செய்யும் தினத்தன்று, வீட்டிற்கு வருபவர்களுக்கு கட்டாயமாக சாப்பிட ஏதாவது கொடுக்கவும். 


மேலும் படிக்க | மூங்கில் செடியை ‘இந்த’ திசையில் வைத்தால் பணத் தட்டுப்பாடு ஏற்படும்


பூஜையில் வைத்த மங்கலப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பெண்ணுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும். நிவேதனம் செய்த பாயாசத்தையும் அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கவும்.


பாயசத்தில் உள்ள நெய் மற்றும் ஏலக்காயின் மணம், வாழ்வில் மணம் வீசும். பாயசத்தின் இனிப்பு போன்ற நிம்மதி வாழ்வில் ஏற்படும்.


இந்த பூஜையை செய்து குடும்பத்தின் செல்வ நிலையை உயர்த்தவும். தடைபட்டு வரும் சுப காரியங்களை நடத்திக் கொடுக்கும் வலிமையும் இந்த பூஜைக்கு உண்டு.


குடும்பத்தின் கடன் சுமையை குறைத்து, மனதில் நிம்மதியையும் கொடுக்கும் இந்த லட்சுமி பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது.


அதோடு, வளர்பிறை வெள்ளியன்று, கோவிலுக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வாங்கி கொடுப்பதும், லட்சுமி கடாட்சத்தைக் கொடுக்கும்.  


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கல்வியில், வேலையில் வெற்றிகள் குவிய கம்யூட்டரை ‘இந்த’ திசையில் வைக்கவும்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR