மூங்கில் செடியை ‘இந்த’ திசையில் வைத்தால் பணத் தட்டுப்பாடு ஏற்படும்..!!

வீட்டில் அல்லது அலுவலகத்தில் மூங்கில் செடியை நடும் போது, சரியான வகையில் வைக்கவில்லை என்றால், பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்படும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2022, 05:02 PM IST
மூங்கில் செடியை  ‘இந்த’ திசையில் வைத்தால் பணத் தட்டுப்பாடு ஏற்படும்..!! title=

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் அல்லது அலுவலகத்தில் மரக்கன்றுகளை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மரங்கள் மற்றும் தாவரங்களில் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழுமையையும் தருகிறது. 

வீடு அல்லது அலுவலகத்தில் மரங்கள் மற்றும் செடிகளை நடுவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் நம்புகிறார்கள். இதனுடன், நேர்மறை ஆற்றலின் விளைவு வாழ்க்கையில் அதிகரிக்கிறது.  வாஸ்து படி, மூங்கில் செடி  வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என கருதப்படுகிறது. ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான திசையில் இல்லாவிட்டால், நிதி நிலை பாதிக்கப்படும். எனவே மூங்கில் தொடர்பான சிறப்பு வாஸ்து விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

மூங்கில் செடியை நடும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
 
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூங்கில் செடியை வைக்கும் போது, அதை ஜன்னல் அருகே அல்லது சூரிய ஒளி வரும் திசையில், அல்லது இடங்களில் வைக்க வேண்டாம். ஏனெனில் இந்த செடி சூரிய ஒளியில் கருகி விடும்.  இது நேரடியாக வீட்டின் பொருளாதார நிலையை பாதிக்கிறது. இதனால், பணத் தட்டுபாடு ஏற்படும். 

மூங்கில் செடியை நடுவதற்கு ஏற்ற திசை கிழக்கு. இந்த திசையில் மூங்கில் செடியை நடுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுகிறது. இதனுடன் வீட்டில் உள்ளவர்களின் நிதி நிலையும் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | கல்வியில், வேலையில் வெற்றிகள் குவிய கம்யூட்டரை ‘இந்த’ திசையில் வைக்கவும்..!!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, 2-3 அடி உயரம் வரை வளரும் மூங்கில் செடிகள் மங்களகரமானவை. அலுவலகத்தில் மூங்கில் செடியை நடுவதால் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கும். மேலும் எதிர்மறை சக்தியும் அகற்றப்படும். இது தவிர அலுவலகத்தில் அல்லது வீட்டில் நடப்பட்ட மூங்கில் செடியின் தண்ணீரை வாரம் ஒருமுறை மாற்றவும். இவ்வாறு செய்வதன் மூலம் நிதி நிலை வலுப்பெறும்.

மூங்கில் செடியை நடுவதால் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், மூங்கில் செடியை படுக்கையறையிலும் வைக்கலாம். இது திருமண வாழ்வில் இனிமை கொண்டு தரும்.

மூங்கில் செடியை ஒரு கண்ணாடி பாத்திரம் அல்லது கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சிவப்பு நாடாவால் கட்டி வைக்க வேண்டும். தொழிலில் வெற்றி பெற, படிக்கும் அறையில் 4 மூங்கில் செடிகளை வைக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உங்கள் குழந்தைகள் அறிவு கூர்மையுடன் இருக்க சில எளிய வாஸ்து குறிப்புகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News