பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு வருடமும், இன்ன வருடத்திய சுபமுகூர்த்தங்கள் என்று, சித்திரை முதல் பங்குனி வரையிலான நல்ல நாட்களைப் பட்டியலிடுவதுடன், அடுத்த ஆண்டு, முதல் மூன்று மாதங்களுக்கான, சுப முகூர்த்தங்களையும் பட்டியலிடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகூர்த்தம் என்பது 3 நாழிகை 45 வினாடி அல்லது 1 மணி 30 நிமிடம் கொண்ட கால இடைவெளியாகும். இந்த நேரம் முழுவதும் ஒரே லக்னத்தில் அடங்கியிருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. முகூர்த்தத்தின் ஆரம்பம் ஒரு லக்னமாகவும், முடிவு வேறொரு லக்னமாகவும் இருக்கலாகாது. முகூர்த்தத்தில், முதலிடம் லக்னத்திற்கே தரப்படுகிறது என்பதை மறக்கக்கூடாது. முகூர்த்த ஆரம்பத்தில் சொல்லப்படுகின்ற மந்திரத்தைக் கவனித்தாலே, லக்னத்திற்குத் தரப்படும் முக்கியத்துவம் புரிந்துவிடும்.


 


ALSO READ | ‘காயத்திரி’ மந்திரம் சொல்வதால் நடக்கும் அதிசயம் தெரியுமா?...


சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முஹூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முஹூர்த்ததில் திருமணம், பிரம்ம முஹூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். முஹூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து சாலச் சிறந்தது.


எனவே திருமணம் செய்ய, காது குத்த, சாந்தி முகூர்த்தம், ஆபரேசன் செய்து குழந்தை பெற, வண்டி வாகனம் வாங்க நல்ல நாட்கள், சுப முகூர்த்த நாட்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நம்முடைய வீட்டில் விஷேச தினங்களை திட்டமிடலாம்.


திருமணம், சீமந்தம், வாசக்கால் வைக்க, கிரகப் பிரவேசம், கிரக ஆரம்பம், மாங்கல்யம் செய்ய புது வண்டி, வாகனம் வாங்க, தொழில் தொடங்க, கடன் வாங்க, காது குத்த, சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாட்கள்:


அக்டோபர் சுப முகூர்த்தம் 2020


  • 2020 அக்டோபர் 18 ஞாயிறு (வளர்பிறை)

  • 2020 அக்டோபர் 26 திங்கள் (வளர்பிறை)

  • 2020 அக்டோபர் 29 வியாழன் (வளர்பிறை)


குறிப்பு : இந்த சுப முஹூர்த்த திருமண தேதிகள் தமிழ் நாட்காட்டி அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. திருமண தேதியை முடிவு செய்யும் முன்பு, உங்கள் ஜோதிடருடன் உங்களது பிறப்பு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பொறுத்து கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.


 


ALSO READ | Best Vastu Tips : திசைகளின் வாஸ்து மந்திரங்களால் வெல்லப்படும், எப்படி தெரியும்?


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR